ஆஹா… அதிமதுரத்தில் இத்தனை அற்புதப் பலன்களா?

So many wonderful benefits of licorice?
So many wonderful benefits of licorice?https://www.onlymyhealth.com

திமதுரம் பல மருத்துவ குணங்கள் கொண்டது. பாரம்பரிய மருத்துவம் அதிமதுரத்தை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையாகக் குறிப்பிடுகிறது. இந்த மூலிகையில் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’ என்கிறார்கள். இனிப்பு வேர் என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு. தெற்கு ஐரோப்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிமதுரம் ஆன்டி ஆக்ஸிடன்ட், கால்சியம், சோடியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி நிறைந்தது.

லிகோரைஸ் தினை வகை தாவர வேர் குடல் மற்றும் வயிற்றுப் பகுதியின் சுவர்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வுவை சரிசெய்யும் அற்புத வேர். அதிமதுரம் வயிற்றுப் புண்ணை சரிசெய்கிறது. இப்பகுதியில் ஏற்படும் உட்புற அரிப்புக்களையும் இது தவிர்க்கும். இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு சாப்பிட்டு வர மேற்கூறிய உடல் நலப் பிரச்னைகள் சரியாகும் என்கிறார் மைக்கேல் முர்ரே எனும் இயற்கை மருத்துவ நல அறிஞர். இதை தனது ‘Total body tuneup’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப கால அல்சர் வந்து வயிற்றில் புண்கள் இருந்தால் மிதமான காரம் சாப்பிட்டால் கூட வயிற்றில் எரிச்சல் தோன்றும். இதனை சரிசெய்ய அதிமதுரப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் 15 நாட்கள் சாப்பிட சரியாகும்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுரப் பொடியை மோரில் கலந்து வெயில் காலத்தில் குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், கண் எரிச்சல் குணமாகும். அது மட்டுமின்றி, உடல் சூடு பிரச்னை உள்ளவர்கள் 17 கிராம் அதுமதுரம் எடுத்து வெந்நீர் விட்டு கலக்கி, பிறகு வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்தால் உடல் உஷ்ணம் தணியும்.

அதிமதுரம் பொடியை 4 கிராம் தினமும் எடுத்துக்கொள்ள மாதவிடாய் பிரச்னைகள் தீரும். இது மாதவிலக்கை தூண்டும். சிறுநீர் எரிச்சல் மற்றும் நீர் கடுப்பை போக்கும். மேலும், அரை ஸ்பூன் அதிமதுரப் பொடியோடு, கடுக்காய் பொடி கால் ஸ்பூன், சிறிதளவு மிளகு பொடி இவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால் தொடர் இருமல், வரட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நாள்பட்ட ஆஸ்துமா குணமாகும். புகைப் பிடிப்பதால் ஏற்படும் இருமலும் கட்டுப்படும்.

அதிமதுரம் பொடியோடு கால் ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சூடான பால் சேர்த்து குடித்தால் நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்யும். சிறுநீர் எரிச்சல், மன அழுத்தம், ஒற்றை தலைவலி மற்றும் தீராத தலைவலி ஆகியவை தீரும்.

செரிமான திறனை அதிகரிக்கும் அதிமதுரப் பொடியோடு வெந்நீர் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட வயிறு நன்கு சுத்தமாகும். மலச்சிக்கலிருந்து விடுபட தண்ணீரை சூடாக்கி அதில் அதிமதுர வேரை போட்டு கொதிக்க வைத்து லேசாக நிறம் மாறிய பின் அதை எடுத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர சரியாகும்.

அதிமதுரம் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அதேபோல் சோம்பும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு கூறுகளைக் கொண்டது. இவை இரண்டையும் சேர்த்து பொடி செய்து சாப்பிட நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து ஓயாத இருமல் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
அவரவர் இடத்தை உணர்ந்தால் ஆனந்தமே!
So many wonderful benefits of licorice?

கோடைக்காலத்தில் நன்னாரியை தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். காரணம், இரண்டுமே குளிர்ச்சியானது. குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையும் மறையும்.

அதிமதுர வேர் ஃப்ரீரேடிக்கல்களால் உங்கள் உடலை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது மற்றும் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. இதனால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிமதுரம் உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உங்கள் சருமத்தை சொறி, அரிப்பு, தடிப்பு சரும அழற்சி மற்றும் வறண்ட சருமம் போன்ற பல்வேறு சருமப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

கருவுற்ற பெண்கள் அதிமதுரத்தை கொண்டு தயாரித்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதேபோல், குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி இதைக் கொடுக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com