கடுமையான காது வலி தீர சில வீட்டு வைத்தியம்!

Earache
Earache
 • கடுமையான காது வலியின் போது, காதுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை விட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 • வெற்றிலையை சாறு பிழிந்து ஒரு சில சொட்டுகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி குறையும்.

 • கடும் காது வலியின் போது இரண்டு சொட்டுகள் துளசிச் சாற்றை காதில் விட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 • காதில் கடுமையான வலி ஏற்படும் போதெல்லாம், ஹீட்டிங் பேட் அல்லது ஹாட் வாட்டர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். சுமார் அரை மணி நேரம் இப்படி செய்தால், காதைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வதால், வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

 • பெருங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக காதில் சில துளிகளை விட காது வலி குறையும்.

 • உப்பை சூடு செய்யவும். வெது வெதுபான பதத்தை அடைந்தவுடன் பஞ்சை அதில் முக்கி எடுக்கவும். இதைக் காதில் 10 நிமிடத்திற்கு வைத்தால் ஈரப்பதத்தை உரிஞ்சி காதில் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

 • நல்லெண்ணெயில் நான்கு பற்கள் பூண்டு போட்டு காய்ச்சி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், இரண்டு சொட்டுகள் காதில் விட்டால், காது வலி பறந்து விடும்.

 • வெதுவெதுப்பாக காய்ச்சிய கடுகு எண்ணெயை இரண்டு சொட்டுகள் காதில் விட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற நன்மைகள்!
Earache
 • எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து வடிகட்டி அதன் சொட்டுகளை காதுகளில் விட வலி குறையும்.

 • திருநீற்று பச்சிலையை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை எடுத்து இரண்டு அல்லது மூன்று துளிகள் வலி உள்ள காதுகளில் விட்டால் வலி நிச்சயமாக குறையும்.

 • நல்லெண்ணெயில் கிராம்பு கலந்து கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி இரண்டு சொட்டுகள் காதில் விட்டால் காது வலி பறந்து விடும்.

 • காதில் ஆப்பிள் சைடர் வினிகர் நனைத்த பஞ்சைக் கொண்டு அடைத்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழிக்கலாம். வலியும் குறையும்.

 • காது வலி தொடர்ச்சியாக இருந்து வந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் காது நரம்புகள், மூளை நரம்புகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com