சிலருக்கு விக்கல் எடுத்தால் அது கொஞ்சம் நேரம் இருக்கும். பிறகு குறைந்து நின்று விடும். ஆனால் பிரச்சனைகள் ஏற்படும் போது விக்கலானது அடிக்கடி வருவது, தொடர்ச்சியாக மணி கணக்கில், நாள் கணக்கில் தொல்லை தருவதுடன் உடல் சோர்வையும் கொடுத்து விடும்.
விக்கல் எடுத்தால் கொஞ்சம் தண்ணீர் குடித்தால், சட்டென நின்று விடும். தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இருப்பது, உணவை வேகமாக அள்ளி விழுங்கி சாப்பிடுவது, சூடாக சாப்பிடுவது, அதிக காரம், மசாலா உணவுகளை சாப்பிட்டவுடன் விக்கல் வந்து விடும். மேலும் கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, புரதச்சத்து உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, பயம் ரீதியான மன நலம் பாதிப்பு போன்றவற்றாலும் விக்கல் வரலாம்.
விக்கலினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் தொடர்ந்து விக்கல் நிற்காமல் இருந்தால் சிறுநீரகம், கல்லீரல் கோளாறு, மாரடைப்பு, வாதம், நுரையீரல் பிரச்சனை, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளை கொடுத்து விடும்.
இதற்கு பிராணாயாமப் பயிற்சி சிறந்த பலனைத் தரும். ஒரு காகித கவரை வைத்து ஊதி, திரும்பவும் அந்த காற்றை சுவாசிக்க வேண்டும். இதுபோல் பத்தோ, கூடவோ செய்து வர கரியமில வாயு அதிகரித்து, பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் விக்கல் நிற்கும்.
உட்கார்ந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். 20எண்ணும் வரை மூச்சை நன்றாக அடக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும். தும்மலை வரவழைத்துக் கொள்ளலாம். சர்கரைத் தண்ணீர், அல்லது குளுக்கோஸ் தண்ணீரை அருந்தலாம். விக்கல் வந்தால் அமைதியாக படுத்து இடப்புறம் ஒருக்களித்து படுக்க விக்கல் நிற்கும்.
சத்தான உணவு, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய விக்கல் பிரச்சனை வராது.