கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் பலருக்கும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதைத் தவிர்க்க அதிக அளவில் நீர்ச்சத்துக் கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
நீரேற்றம் நிறைந்த 10 காய்கறிகளும், சத்துக்களும் சமைக்கும் முறையும்:
இதில் தோராயமாக 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. குறைந்த கலோரிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த காய் எடை இழப்பு, மற்றும் நீரேற்றத்திற்கு உதவுகிறது. இதைக் கழுவி விட்டு பச்சையாக உண்ணலாம். சாலடுகளில் சேர்த்தும் உண்ணலாம்.
இதில் 95% நீர்ச்சத்து உள்ளது. விட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியத்தின் சத்துக்கள் அடங்கிய இந்தக் காயை வெயில் காலத்தில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பாரில் போட்டும் மற்றும் சட்னியாக செய்தும் சாப்பிடலாம்.
முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் வெயில் காலத்திற்கேற்ற உகந்த காயாகும். இது செரிமானத்தை எளிதாக்கி உடலை நீரேற்றமாக வைக்கிறது. சுரைக்காயை பச்சடி மற்றும் கூட்டு செய்து சாப்பிடலாம்.
நீர்ச்சத்து உள்ள வெண்டைக்காயில் ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் ஏ, பி, கே மற்றும் சி, மெக்னீசியம், ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. செரிமானத்தை ஆதரித்து கொழுப்பின் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. புரதம் அதிகம் உள்ள இந்தக் காயை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். குழம்பில் போட்டும், பொரியல் செய்தும் உண்ணலாம்.
இதில் தோராயமாக 94 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. லைகோபின் போன்ற ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த தக்காளியை தினமும் உணவிலும் சமையலிலும் சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். வெயில் காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள தக்காளி மிகவும் உதவியாக இருக்கிறது. தக்காளியை அனைத்து விதமான சமையலிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் தோராயமாக 92 சதவீதம் நீச்சத்து உள்ளது. விட்டமின்கள் சி மற்றும் கே நிறைந்தது. நார்ச்சத்தும் உள்ளது. கோடைகாலத்திற்கு ஏற்ற காயாகும். குழம்பாகவும், பொரியலாகவும் செய்து உண்ணலாம்.
இதிலும் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. விட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. வெயில் காலத்தில் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் உடலுக்கு சூடு. ஆனால் குடைமிளகாய் நல்லது.
கீரைகளில் 91% நீர் உள்ளடக்கம் உள்ளது. மேலும் இவற்றில் இரும்பு சத்து, விட்டமின் கே மற்றும் ஃ போலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கூட்டு, பொரியல், கடைசல் செய்ய ஏற்றது.
இதிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து, விட்டமின் கே, சி, இரும்பு சத்து, மெக்னீசியம், விட்டமின் பி6 போன்றவை உள்ளன. இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் இந்தக் காயை அடிக்கடி எடுத்துக் கொண்டால் ரத்த சோகையை நிவர்த்தி செய்யும். உடல் எடையைக் குறைக்கும். மலச்சிக்கலை நீக்கும். ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும். கூட்டு, சாம்பார், பொரியல், சட்னி என பல வகைகளில் உண்ணலாம்.
இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் விட்டமின்கள் ஏ, பி, சி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், தயமின் நிறைந்துள்ளது. சுவாசப் பிரச்சனைகளைப் போக்கி பசியைத் தூண்டும். வெயில் காலத்தில் புடலங்காயை பொரியல் ஆகவோ கூட்டாகவோ செய்து அடிக்கடி உண்ண வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து நீர்ச்சத்து உடலுக்கு மிக நல்லது.