
வெயில் காலத்துல கிடைக்கிற சுவையான பழங்கள்ல பலாப்பழம் எல்லாருக்குமே பிடிக்கும். ஆனா, இந்த கோடை நேரத்துல பலாப்பழம் சாப்பிடலாமா? இல்லையா? இது உடம்புக்கு உஷ்ணத்தை உண்டாக்குமான்னு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். இந்த பதிவுல பலாப்பழத்தோட நன்மைகள், யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கணும்னு பார்ப்போம்.
பலாப்பழத்துல நார்ச்சத்து நிறைய இருக்கு. இது நம்ம செரிமான மண்டலத்துக்கு ரொம்ப நல்லது. மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இதுல இருக்குற சில நொதிகள் சாப்பாட்டுல இருக்குற புரதத்தை உடைச்சு சத்துக்களை உடம்பு எடுக்க உதவும். ரத்த அழுத்தம் அதிகமா இருக்குறவங்களுக்கு இது ரொம்ப நல்லது.
இதுல இருக்குற பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய்கள் வர்ற அபாயத்தைக் குறைக்குது. இது ஒரு உடனடி சக்தி கொடுக்கிற பழம். இதுல இருக்குற இயற்கையான சர்க்கரையும், சிக்கலான கார்போஹைட்ரேட்டும் உடம்புக்கு உடனடியாவும், நீண்ட நேரத்துக்கும் சக்தியைக் கொடுக்குது.
கோடை காலத்துல பலாப்பழம் சாப்பிடறது உடம்பைக் குளிர்ச்சியா வச்சுக்க உதவும். இதுல 70-80% தண்ணீர் இருக்கு. வியர்வை மூலமா வெளிய போற நீர்ச்சத்தை இது ஈடு செய்யுது. இதுல இருக்குற வைட்டமின் சி சளி, காய்ச்சல் மாதிரி பருவகால நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
உடம்போட எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்தைப் பளபளப்பா வச்சுக்கவும், சுருக்கங்கள் விழாமல் இருக்கவும் இது நல்லது. வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் முகப்பருவைக் குறைக்கும். தைராய்டு பிரச்சனை, ரத்த சோகை, புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கவும், கண் பார்வைக்கும் இது நல்லதுன்னு சொல்றாங்க.
பலாப்பழம் சாப்பிட்டா உடம்பு சூடாகும், வேர்க்குரு வரும்னு சில பேர் நினைக்கிறாங்க. ஆனா, ஊட்டச்சத்து நிபுணர்கள் இதுல நிறைய சத்துக்கள் இருக்கறதா சொல்றாங்க. ஆனாலும், சில நிலைமைகள்ல இதைத் தவிர்க்கிறது நல்லது. சர்க்கரை நோய் இருக்கிறவங்க, கல்லீரல்ல கொழுப்பு இருக்கிறவங்க, கிட்னி பிரச்சனை இருக்கிறவங்க கட்டாயம் இதைச் சாப்பிடக்கூடாது. ஏற்கனவே உடம்பு சரியில்லாதவங்க, வேர்க்குரு, கொப்பளம் மாதிரி பிரச்சனை இருக்கிறவங்களும் இதை அதிகமா சாப்பிட வேண்டாம். குழந்தை பாக்கியத்துக்கு முயற்சி செய்யிறவங்களும் தவிர்க்கறது நல்லது.
பலாப்பழத்தை வெறும் வயித்துல சாப்பிடக்கூடாது. சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு கொஞ்சமா சாப்பிடலாம். நாள்பட்ட நோய்கள் இருக்கிறவங்க ஒரு நாளைக்கு 3-4 துண்டுகளுக்கு மேல சாப்பிடக்கூடாது. சாயங்காலமோ இல்லன்னா ராத்திரியோ சாப்பிடறதை தவிர்க்கிறது நல்லது.
பலாப்பழம் சாப்பிடும்போது அதிகமா தண்ணி குடிக்கறதும், கூடவே பச்சை காய்கறிகளை சேர்த்துக்கறதும் உடம்புக்கு நல்லதுன்னு சொல்றாங்க. உங்களுக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை இருந்தா, ஊட்டச்சத்து நிபுணர் கிட்ட கேட்டுட்டு சாப்பிடறதுதான் நல்லது.
சுவையான பலாப்பழம் பல நல்ல விஷயங்களை உடம்புக்குக் கொடுத்தாலும், சில கண்டிஷன்களோட சாப்பிடுவதுதான் பாதுகாப்பானது. சரியான அளவுல, சரியான நேரத்துல, யாருக்குச் சாப்பிடக்கூடாதுங்கறதை தெரிஞ்சு சாப்பிட்டா, கோடை காலத்துல பலாப்பழத்தை ரசிச்சு சாப்பிடலாம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)