பருவப் பெண்களுக்கான சூப்பர் டயட் டிப்ஸ்!

Super Diet Tips for Teenage Girls!
Super Diet Tips for Teenage Girls!

புரிந்தும் புரியாத வயதில் இருக்கும் பருவப் பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டயட் டிப்ஸ்அதிகம் இருக்கிறது. அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

பொதுவாக ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என டீன் ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக டயட் என்ற பெயரில் நிறைய பேர் பட்டினி கிடப்பதை பார்க்க முடியும். நம் உடலுக்கு கலோரி ,புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசியம் .ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வேலைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக பருவப் பெண்கள்.

கலோரி: பெண் பருவமடைந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும் .13 இல் இருந்து 18 வயதில் உள்ள பெண்களுக்கு 2,200 கலோரிகள் தேவை. கலோரிகளை தினசரி டயட்டில் எப்படி சேர்ப்பது என்றால் பருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம், தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

புரதம்: பருவ வயதில் புரதச்சத்து மிகவும் அவசியம். புரதம் அளவு குறைந்தால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் உபாதைகள் ஏற்படும் .மேலும் உடலில் உள்ள ஹார்மோன் என்சைம் மற்றும் ஜீரண சக்தி குறைந்து போகும். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை அல்லது காராமணி போன்றவற்றை வேக வைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம் .பால் பிடிக்காதவர்கள் தயிர் அல்லது பால் சேர்த்த பாயாசம் செய்து சாப்பிடலாம். சோயா உணவுகள், கடலை மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

இரும்புச் சத்து: தினமும் ஏதேனும் ஒரு கீரையை 100 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வரலாம். சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி, பால் குடிக்கலாம். உலர்திராட்சை மற்றும் பேரிச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும். முளைகட்டிய பயிறு மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் ,கொய்யா, எலுமிச்சை, மாம்பழம் தக்காளி ,வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவைகளை சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
மாம்பழச்சாறு பருகுவதன் மகத்தான நன்மைகள்!
Super Diet Tips for Teenage Girls!

கால்சியம்: கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்துவிடும். அதனால் தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது அவசியம். வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ராகி ,எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கிறது. பால் பொருட்கள், பீன்ஸ், முட்டை, பட்டாணி, பச்சை காய்கறிகள், மீன் போன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதால் எலும்பு, பற்கள் வலுவடையும். தசைகள் இயல்பாக இயங்க இச்சத்து மிகவும் அவசியம். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணையில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

ஆக இது போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் படிப்பிலிருந்து எதை சாதிக்க நினைக்கிறார்களோ அத்தனையும் நன்றாக சாதிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com