‘ஆ’வென அலறவைக்கும் உருளைக்கிழங்கில் ‘ஆஹா’வென வியக்கவைக்கும் சத்துக்கள்!

‘ஆ’வென அலறவைக்கும் உருளைக்கிழங்கில் ‘ஆஹா’வென வியக்கவைக்கும் சத்துக்கள்!

ணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக்கொண்டால் வாய்வு தொல்லை ஏற்படும் என்று ஒதுக்க வேண்டாம். இது உண்மையல்ல என்று மருத்துவ நூல் தெரிவிக்கிறது. உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து, மசாலா போட்டு சாப்பிடுவதினால்தான் வாய்வு தொந்தரவு வரும். இப்படி சமைக்காத உருளைக்கிழங்கில் வாயு தொல்லை இல்லை அறிய வேண்டும். அதுமட்டுமின்றி, உருளைக்கிழங்கில் உள்ள பல்வேறு சத்துக்களைக் காண்போம்.

* உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்து உள்ளது.

* உருளையை தோலுடன் உண்பதால் நார்ச்சத்து உடலில் சேர்கிறது.

* குறைவான கலோரிகளை உடையது உருளை. இதனை வறுத்து உண்பதைவிட, வேகவைத்து உண்பதே நல்லது.

* வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதம் ஆகும்.

* உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும் இரத்தக் கொதிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

* உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

* உருளைக்கிழங்கில் உள்ள மாவு சத்து, வயிற்றில் நச்சு நீர் தேங்குவதை முன்கூட்டியே தடுத்து, உடலுக்கு நன்மை செய்கிறது.

* உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிது அளவு புரதமும் நிறைந்துள்ளன. ஆகவே, ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

* பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்து, தேன் கலந்து சருமத்தில் தடவினால் சரும புள்ளிகள் மறையும்.

* வேகவைத்த பின்பு தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மசியல் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.

* உருளைக்கிழங்கு சிறுநீரை பெருக்கி, பித்த கோளாறுகளையும் குறைக்கிறது.

* உருளைக்கிழங்கின் தோலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com