சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் ஏற்ற உணவாகும் இனிப்பு துளசி!

Sweet Tulsi is an ideal food for diabetics
Sweet Tulsi is an ideal food for diabetics
Published on

‘எனக்கு சர்க்கரை வியாதி வந்து விட்டது. என்னால் இனி இனிப்பு சாப்பிட முடியாது, நாட்டு சர்க்கரை சாப்பிட முடியாது’ என வாழ்க்கையே பலருக்கும் கசப்பாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் வாய்த்திருக்கும் வரம் தான், ‘இனிப்பு துளசி. ’துளசி என்றால் கொஞ்சம் காரமாகத்தானே இருக்கும். அது எப்படி இனிக்கும்?‘ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆமாம், துளசியில் இனிப்பு துளசி என்று ஒரு ரகம் உண்டு. இது பலரும் அறிந்திடாத ஒன்று. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இனிப்பு துளசியின் இலைகள், தண்டுகள் சர்க்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரிஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகளும் செய்கிறார்கள், எண்ணெய்யும் எடுக்கிறார்கள்.

பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன்படுத்துகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்க்கரையை விட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது, ‘பிளட் சுகர்’, இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளை குணப்படுத்தும்.

தினசரி உணவு முறைகளில் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரும்புச் சர்க்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.  தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலையைப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், உடலுக்கு சுகத்தையும் தரும் பெருங்காயம்!
Sweet Tulsi is an ideal food for diabetics

ஏனெனில், இனிப்பு துளசி இலை இயற்கையாகவே இனிப்பு தன்மையுடையது. இது கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே, இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெபடையோசைடு எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை  கரும்பு சர்க்கரையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. இனிப்பு துளசி பொடியாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி நீங்களும் இனிப்புடன் காப்பி, டீ என குடித்து மகிழலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com