கிட்னி கேன்சரின் அறிகுறிகள்... ஜாக்கிரதை! 

Kidney Cancer
Symptoms of Kidney Cancer!
Published on

சிறுநீரகங்கள் நம் ரத்தத்தை சுத்திகரித்து அதிகப்படியான நீர் மற்றும் கழிவு பொருட்களை சிறுநீராக வெளியேற்றுகின்றன. ஆனால், இந்த முக்கியமான உறுப்புகளும் புற்றுநோயால் பாதிக்கப்படலாம். சிறுநீரக புற்றுநோய் எனப்படும் இந்த நோய் சிறுநீரகங்களில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்து புற்றுநோய் செல்களாக மாறும்போது ஏற்படுகிறது.‌ இந்தப் பதிவில் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இருக்காது. நோய் முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.

  • சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படலாம். 

  • பக்கவாட்டில் வயிறு அல்லது கீழ் முதுகில் அதிக வலி ஏற்படும். 

  • இரவில் அதிகமாக வியர்ப்பது குறிப்பாக எந்த காரணமும் இல்லாமல் வியர்ப்பது ஏற்படும்.

  • சிறுநீரகப் புற்றுநோயால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். 

  • ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இரத்த சோகை ஏற்படும். 

  • ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கலாம். 

  • எந்த காரணமும் இன்றி உடல் எடை குறையும். 

  • உணவு மீதான ஆர்வம் குறையும். 

  • தொடர்ச்சியான சோர்வு மற்றும் உடல் வலி இருக்கும். 

சிறுநீரக புற்றுநோய்க்கான காரணங்கள்: சிறுநீரக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான துல்லியமான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சில காரணங்கள் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். 

புகைப்பிடித்தல் சிறுநீரக புற்று நோய்க்கான மிக முக்கியமான காரணியாகும். இத்துடன் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே குடும்ப வரலாற்றில் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், இது ஏற்படலாம். 

பிறக்கும்போதே சிலருக்கு சிறுநீரக அமைப்பில் குறைபாடுகள் இருக்கும். இவர்கள் தொடக்கத்திலேயே அந்த பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்கு சிறுநீரகங்களில் சிறு கட்டிகள் உண்டாகி, அது புற்றுநோயாக மாறும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!
Kidney Cancer

சிகிச்சை: சிறுநீரகப் புற்றுநோய்க்கான சிகிச்சையானது நோயின் நிலை, கட்டியின் அளவு, நோயாளியின் உடல்நிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து. பொதுவாக இதற்காக பயன்படுத்தப்படும் சிகிச்சைகள் என்று பார்க்கும்போது, முதலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதில் அந்த கட்டி முழுமையாக அகற்றப்படும். பின்னர் கீமோதெரபி, ரேடியோ தெரபி, ஸ்பாட் ட்ரீட்மென்ட் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம். 

சிறுநீரகப் புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. உடல் ரீதியான பிரச்சினைகளுடன் மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதட்டம், மனச்சோர்வு, கோபம் போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கக்கூடும். புற்றுநோய் என்பது ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் ஒரு நோய் என்பதால், நோயாளிகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுவார்கள். 

எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி, உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமாக, இதுபோன்ற நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com