உடலில் நீர்ச்சத்து இல்லையென்பதற்கான அறிகுறிகள்!

Water
Water

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது நீர். நீர்ச்சத்து இல்லையென்றால் பல வித நோய்கள் உடலைத் தாக்கும். நீர்ச்சத்து உடலில் இல்லை என்று தெரிந்தால்தானே, அதனை சரி செய்ய முடியும். அந்தவகையில், நீர்ச்சத்து இல்லை என்பதற்கான அறிகுறிகளைப் பற்றிப் பார்ப்போம்.

நினைவாற்றல் பாதிப்பு:

நீர்ச்சத்து இல்லையென்றால், நினைவாற்றல் பாதிக்கும் என்பது ஆய்வுகளின் கூற்று.  நீண்ட நேரத்துக்கு ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. இதனால் நாம் செய்யும் வேலையில் முழு கவனம் இல்லாமல் போகிறது. தாகம் இருந்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இல்லை. உங்கள் வேலையின் இடையில் அடிக்கடி நீர் அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஆற்றலுடன் வேலை செய்யலாம்.

மனநிலை மாற்றம்:

சிலர் எப்போதும் குழப்பமாகவோ, சோகமாகவோ, மனச்சோர்வாகவோ இருப்பார்கள். எந்தக் காரணமின்றி அவ்வாறு இருப்பார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணம் நீராகக்கூட இருக்கலாம். ஆமாம்! நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மனச்சோர்வு, குழப்பம், கோபம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

தலைவலி:

நமது மூளைக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காதபோது தலைவலி ஏற்படும். ஆனால், இது தெரியாமல் சிலர் மாத்திரைப் போடுகிறார்கள். எப்போதும் முதலில் தலை வலித்தால் நீர் அருந்துங்கள், அப்போதும் போகவில்லை என்றால் மட்டும் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வளர்சிதை மாற்றத்தின் பாதிப்பு:

நீர்ச்சத்து குறைபாடுடன் இருக்கும் போது அது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. எனவே உங்களது வளர்சிதை மாற்றத்தை சீராக்க மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நமது உடலுக்குத் தேவையான நீரினை அருந்துவது அவசியம்.

சரும பாதிப்பு:

நீர்ச்சத்து இல்லையென்றால், முகச்சருமம் வறண்டுவிடும் என்பது நாம் அறிந்ததே. ஆகையால் தினமும் நம் உடலுக்கும் சருமத்திற்கும் தேவையான அளவு நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வீர்கள்:

சில சமயம், அடிக்கடி பசிக்கும். அதுவும் அப்போதுதான் நன்றாக சாப்பிட்டுவிட்டு வருவோம். ஆனால், அப்போதும் பசிக்கும். அதற்கு காரணம் நீர்ச்சத்து குறைப்பாடுதான். நன்றாக சாப்பிட்டப் பின்னரும் பசிக்கிறது என்றால், நீர் அருந்துங்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் தெரியாமல் கூட இஞ்சியை சாப்பிட்டு விடாதீர்கள்? 
Water

பக்கவாதம் ஏற்படும்:

கடுமையான நீர்ச்சத்து குறைபாடு பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பக்கவாதம் ஏற்பட்ட நபர்கள் போதுமான அளவு நீரினை அருந்தாதபோது குணமடைய காலதாமதம் ஆகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பக்கவாதம் மோசமாக இருக்காது என்றாலும், குடிக்கும் நீரின் அளவில் கவனம் தேவை.

இந்த அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு நீர்ச்சத்து இல்லையென்று அர்த்தம். அப்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே விஷயம், அன்றிலிருந்து தினமும் போதுமான நீர் எடுத்துக்கொள்வதே ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com