
நம்முடைய உடலில் உள்ள உறுப்புகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். நம்முடைய உடலுக்கு கிட்னி என்பது மிகவும் இன்றியமையாத உறுப்பாகும். கிட்னி செயல் இழந்துப்போனால், நம் உடலில் கழிவுகள் சேர்த்து விடும். நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் சிறுநீர் வழியாகவே வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதிவில் சிறுநீரகம் செயல் இழக்கும் போது காட்டும் அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றியும் அதை குணமாக்கும் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக பார்ப்போம்.
1. சிறுநீரின் நிறம் மிகவும் மஞ்சள் நிறம் அல்லது நுரையாக மாறக்கூடாது. அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வதுக்கூட ஒருவகையான அறிகுறியாக இருக்கலாம்.
2. சிறுநீரகம் செயல் இழந்துப்போனால், சருமம் வறண்டு அரிப்பு ஏற்படத் தொடங்கும். சில நேரங்களில் உடலில் சிவப்புநிற தடிப்புக்கள் தோன்றும்.
3. நாம் மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் இருப்பது சிறுநீரகம் செயல் இழப்பதற்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
4. கால்கள், முகம், கைகள் திடீரென்று வீங்கத் தொடங்கனால், அது சிறுநீரக செயல் இழப்பின் அறிகுறியாகும்.
5. எப்போதும் பசி குறைவாக இருப்பது, வாயில் கசப்புத்தன்மை இருப்பது, அடிக்கடி வாந்தி எடுப்பதுப்போல உணர்ந்தால் கண்டிப்பாக கவனம் தேவை.
கிட்னி செயல் இழந்துப் போவதற்கான முக்கிய காரணம் சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையாகும். நம்முடைய உடலில் அதிகப்படியான சர்க்கரை அளவு இருப்பது கிட்னியை பாதிக்கும். அதுப்போல உயர் ரத்த அழுத்தம் இருந்தால், நரம்புகளில் ரத்தம் வேகமாக பாயத்தொடங்கும். இது கிட்னியில் உள்ள திசுக்களை பாதிக்கும்.
சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்பதை கண்டுப்பிடிப்பது சற்றுக் கடினமேயாகும். சிலருக்கு எந்த அறிகுறிகளையுமே காட்டாது. அந்த சமயங்களில் சில பரிசோதனைகள் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். சிறுநீரகம் செயல் இழக்கும் அறிகுறிகள் தென்பட்டால், உடனே நல்ல மருத்துவரை பார்ப்பது சிறந்ததாகும்.
Blood test, Ultrasound ஆகியவற்றை பயன்படுத்தி கிட்னி செயல் இழந்து உள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவார்கள். Dialysis, kidney transplant போன்ற சிகிச்சைகள் மூலமாக சேதமடைந்த சிறுநீரகத்தை மாற்றியமைத்து சரியாக வேலை செய்ய வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.