தற்போது நாட்டில் ஏராளமான வைரஸ் வகைகள் பரவி வருகின்றன. அந்த வைரஸ்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளைதான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.
மழைக்காலம் ஆரம்பித்தால் போதும், வைரஸ்களால் நோய்கள் தோன்றி, தொற்றுகள் பரவி மோசமான நிலைமையை உருவாக்கும். அப்போது நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அதேபோல் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் சில பண்புகள் உடலில் அதிகமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஜிங்க் மற்றும் தூத்தநாகம் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.
அந்தவகையில் வைரஸ்களிலிருந்து நமது உடலைக் காப்பாற்றும் சில உணவுகளைப் பார்ப்போம்.
கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளில் அதிகமாகவே தூத்தநாகம் இருக்கும். பருப்பு வகைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், இவற்றை வழக்கமாக எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.
முட்டை:
முட்டையிலும் நமக்குத் தேவையான அளவு தூத்தநாகம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி வலுபெற இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
மட்டன்:
ஆடு இறைச்சியில் உள்ள புரதம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பவை. இதய ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
பூசணி விதைகள்:
30-கிராம் பூசணியில் சுமார் 2.2 மி.கி ஜிங்க் உள்ளது. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த விதைகளை காலையில் சாலடில் எடுத்துக்கொள்ளலாம்.
பால்:
பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளன. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. நமது உணவில் பால் சேர்த்துக் கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டையும் ஆதரிக்கும்.
ஓட்ஸ்:
ஓட்மீல் மற்றும் ஸ்மூத்தியின்மூலம் ஓட்ஸை எடுத்துக்கொள்ளலாம். இதில் தூத்தநாகம் மட்டுமல்ல நார்சத்தும் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.
இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதன்மூலம் எந்த வகையான வைரஸ்களையும் எதிர்த்து, நமது உடல் போராடுக்கூடிய சக்திபெறும்.