உணவுடன் பட்டர் சேர்த்து உண்பது ஆயுளை குறைக்குமாமே! ஆகையால் அதற்கு பதிலாக வேறு சிலவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். வாருங்கள் பார்ப்போம்!!!
சமீபத்திய ஆராய்ச்சிகள் உணவுடன் பட்டர் சேர்த்து உண்பது இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் கேன்சரையும் கொண்டு வரக் கூடிய ஆபத்தானது எனக் கூறுகிறது. தினசரி பட்டர் உண்பது இறப்பு விகிதத்தையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பட்டருக்கு மாற்றாக ஆரோக்கியம் குறையாத, ஆபத்தில்லாத வேறு எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆலிவ் ஆயில்: இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கேன்சர் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்க உதவி புரிகின்றன.
குறிப்பாக எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க உதவுகிறது. ஆலிவ் ஆயிலை சமையலிலும், பேகிங் மற்றும் சாலட் ட்ரெஸ்ஸிங்களிலும் தாராளமாக உபயோகிக்கலாம்.
2. அவகாடோ: க்ரீமி டெக்ச்சர் தவிர்த்து, இதிலுள்ள கொழுப்புச் சத்து, இப்பழத்தை தோல் நீக்கி மசித்து பிரட் ஸ்லைஸ்களின் மீது தடவி உண்ணவும், சாஸ்களின் தயாரிப்பிலும் சேர்க்கலாம். இப்பழத்தில் நார்ச் சத்துக்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் வீக்கங்களையும் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகின்றன.
3. நட் பட்டர்: ஆல்மன்ட், முந்திரி மற்றும் வேர்க்கடலைப் பருப்புகளிலிருந்து தயாரிக்கப்படும் பட்டர் க்ரீமி டேஸ்ட் தருவதுடன் ப்ரோட்டீன் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புச் சத்துக்களையும் தர வல்லவை. இவற்றிலுள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியம் காக்க உதவுகின்றன.
4. தேங்காய் எண்ணெய்: பட்டருக்குப் பதிலாக சமையல் மற்றும் பேகிங் செய்ய தேங்காய் எண்ணெய் சேர்ப்பது ஆரோக்கியம் தரும். இதிலுள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகள் பட்டர் போலில்லாமல், சிறிதளவு நன்மை தருவதாகவே உள்ளன.
5. தாவர அடிப்படையில் தயாரிக்கப்படும் ஸ்பிரெட்: அவகாடோ ஆயில், கனோலா ஆயில் மற்றும் சோயா பீன் ஆயில் போன்ற தாவர அடிப்படையிலான பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்பிரெட் (spread) இதய ஆரோக்கியம் காக்க உதவும்.
இவ்வகை ஸ்பிரெட்களிலிருக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். சிறிதளவு பதப்படுத்தப்பட்ட, ட்ரான்ஸ் பேட்ஸ் (Trans fats) கலக்காத தாவர அடிப்படையிலான ஸ்பிரெட்களை தேர்ந்தெடுத்து உபயோகிப்பது ஆரோக்கியம் தரும்.
பட்டரிலிருக்கும் ஆரோக்கியமற்ற குணங்களுக்காக பட்டர் உபயோகிப்பதை தவிர்த்து மேலே குறிப்பிட்ட மாற்றுப் பொருட்களை உட்கொண்டு வாழ் நாளை நீட்டிப்போம்.