தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? காபி குடிக்கும் நேரத்தை உடனே மாற்றுங்கள்!

Tea shop
Tea shopImg Credit: AI Image
Updated on

“டேய்… ஒரு டீ குடிச்சிட்டு வரலாமா?”

“அம்மா... தலை வலிக்குது, ஒரு ஃபில்டர் காபி கொடு!”

“தோஸ்த்… கேன்டீன் போய் டீ சாப்பிடலாமா?”

“யேய் விஜி... ஃபுட் கோர்ட் போய் ஒரு ஃபில்டர் காபி குடிக்கலாமா?”

இதுபோன்ற கோரிக்கைகள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதவை. ஆம், டீயும் காபியும் (Tea and Coffee) நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. சரி, இது ஆரோக்கியமான விஷயமா? சந்தேகமே இல்லாமல், இவை உடல் நலத்திற்குப் பெரிதும் உதவுபவைதான். டீயோ அல்லது காபியோ, அளவோடு இருந்தால் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதில் ஐயமில்லை. சற்று ஆராய்வோம்!

தேநீர் (Tea) தரும் நன்மைகள்:

தேநீர் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது; இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க உதவும். இதைச் சர்க்கரை இல்லாமல் குடித்தால், எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு (Metabolism) மிகவும் உதவுகிறது. மேலும், தேநீர் நமக்கு ஒருவிதப் புத்துணர்ச்சி தருவதை நாம் அனைவரும் உணர்வோம்.

  • ஃபிளாவனாய்ட்ஸ் (Flavonoids): டீயில் உள்ள ஃபிளாவனாய்ட்ஸ் ஒரு வரப்பிரசாதம். இது ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.

  • ஆன்டி-ஆக்சிடன்ட்கள்: இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செல் (திசு) பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

  • பலன்கள்: எலும்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; மதியை (புத்தியை) கூர்மையாக்குகிறது.

இன்று பால் இல்லாத தேநீர் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. பிளாக் டீ, லெமன் டீ, மசாலா டீ, புதினா டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, தேன் டீ எனப் பல ருசிகளில் இவை கிடைக்கின்றன. மக்கள் அதிக அளவில் லெமன் மற்றும் இஞ்சி டீயை விரும்பித் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

காபி (Coffee) தரும் நன்மைகள்:

தேநீரைப் போலவே காபியும் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவுகிறது. காபி குடித்தால் உடலில் ஆற்றல் அதிகரிப்பதோடு, கவனக் கூர்மையும் (Focus) கூடும். இவை அனைத்தும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட தகவல்கள்!

  • பாதுகாப்பு: பார்க்கின்சன் நோய், அல்சைமர் மற்றும் கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்க காபி உதவுகிறது.

  • மூளை செயல்பாடு: இது மூளையைத் தூண்டி விழிப்புணர்வுடன் இருக்கச் செய்யும்; நினைவாற்றலை அதிகரிக்கும்.

  • இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்தைப் பேணுவதோடு, நீரழிவு நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
உஷார்: தலையணைக்கு அடியில் மொபைல் போன் வைக்கிறீர்களா?
Tea shop

கவனிக்க வேண்டிய ஒன்று: காபிக்குத் தூக்கத்தைத் தள்ளிப்போடும் குணம் உண்டு. எனவே, தூங்கச் செல்வதற்கு 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே காபி குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. டீ அல்லது காபியை ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் வரை தாராளமாக ரசித்து, ருசித்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு 5 கப்பைத் தாண்டாமல் இருந்தால், அது எந்தவித அசெளகிரியத்தையும் தராது.

சந்தேகமில்லாமல், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் டீ & காபி!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com