உஷார்: தலையணைக்கு அடியில் மொபைல் போன் வைக்கிறீர்களா?

Smartphone usage
Smartphone usageImg credit: AI Image
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

தற்காலத்தில் மொபைல் போன் தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக உருவெடுத்துவிட்டது. மொபைல் போன் பயன்பாடு அவசியமானது என்றாலும், அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது பல்வேறு வகையிலும் உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து உமிழப்படும் நீலஒளி கதிர் வீச்சு உங்கள் மூளையின் ஆற்றலுக்கு வைக்கப்படும் 'வெடிகுண்டு' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்த ஒளி உங்கள் மூளையின் வடிவத்தையே நாளடைவில் மாற்றிவிடலாம். அதனால் ஞாபக மறதி, மனப்பதட்டம் போன்றவை ஏற்படலாம் என்கிறார்கள் கொச்சின் மூளை நல அமைப்பின் ஆய்வாளர்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மென்பொருட்களில் இருந்து வெளிப்படும் ஒளியை அதிக நேரம் பார்ப்பதால் விரைவில் கண் பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் டோலிடோ பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி கதிர் வீச்சை அதிக நேரம் பார்த்து வருகின்றவர்களுக்கு 50 முதல் 60 வயதிலேயே பார்வையில் குறைபாடு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளது என்கிறார்கள்.

மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் நீல ஒளியை வழங்கும் எல்.இ.டி பல்புகளின் அதிகப்படியான கதிரியக்க வெளிப்பாடு கேன்சர் செல்கள் உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்பதை எக்ஸ்டெர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

நீல நிற வெளிச்சம் வழங்கும் எல்.இ.டி பல்புகள் வழங்கும் கதிர் வீச்சு நமது உடலில் மெலோடோனின் அமில சுரப்பை குறைக்கும். இது நமது உடலின் பயோலாஜிக்கள் கடிகாரத்தின் செயல்பாட்டை முடக்கி ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயையும் உருவாக்குகிறது என்கிறார்கள். ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான நீல ஒளி கதிர்வீச்சு உடல் பருமனை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது என்கிறார்கள்.

தூங்கும்போது ஏன் மொபைல் போனை தலையணைகள் அருகில் வைத்திருக்கக் கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

உங்கள் தொலைபேசித் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும். இது தூங்குவதை சிரமமாக்கி, உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இதனால் பகல்நேரத்தில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாதளவுக்கு சோர்வு ஏற்படலாம்.

படுக்கையில் போன் வைத்திருப்பதால், நீங்கள் தூங்க முயன்றாலும், அதிலிருந்து வரும் ஒலிகள் உங்களை எழுப்பி, உங்கள் தூக்க சுழற்சியை குறுக்கிட்டு, ஒட்டுமொத்த தூக்க கால அளவைக் குறைக்கும். முக்கியமாக மொபைல் போன்களால் வெளிப்படும் கதிர்வீச்சின் அளவுகள் பொதுவாகக் குறைவாகக் கருதப்பட்டாலும், வெளிப்பாட்டின் நீண்டகால விளைவுகள் பெரியளவில் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
சம்மரில் உங்க ஆரோக்கியத்தை நாசமாக்கும் 6 மோசமான காய்கறிகள் பற்றி உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Smartphone usage

போதுமான தூக்கம் இல்லை என்றால் இன்சுலின் சுரப்பதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். ஏற்கனவே நீரிழிவு இருப்பவர்களின் ஆரோக்கியத்தை மேலும் மோசமடைய செய்யும்.

மொபைலை இரவில் நேரத்தில் தள்ளிவைத்தால் தரமான தூக்கம் கிடைக்கும். இது உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். மேலும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற வளர்சிதை மாற்றம் நோய்களை தவிர்க்கலாம்.

இரவில் போனை அதிகம் பயன்படுத்துவதால், உயர் இரத்த அழுத்தம் தொடங்கி இதயநோய் வரை பல உடல்நிலை பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமையும். மேலும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இரவில் நீண்ட நேரம் மொபலை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் வலி, கண் வறட்சி, தலைவலி போன்ற பிரச்னைகள் வரலாம். இதனால் இரவில் மொபைலை தவிர்த்து கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஜிம்முக்கு போகாமலேயே எடையைக் குறைக்க இதோ ஒரு 'சிவப்பு' மேஜிக்!
Smartphone usage

ஸ்மார்ட் போன் நீல ஒளி கதிரியக்க கதிர் வீச்சு கழிவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரத்திற்கு ஸ்மார்ட் போன் பார்க்காமல் இருங்கள். குறிப்பாக சேஷியல் மீடியா பார்க்காமல் இருங்கள்.

உடலுக்கு அதிகமான அளவில் இயக்கம் கொடுங்கள்; தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உடல் நலனை மட்டுமல்ல, மூளையின் நலனையும் பாதுகாக்கும். தொடர்ந்து போன் பார்க்காமல் இடை இடையே மூன்று நிமிடங்கள் பசுமை சார்ந்த காட்சிகளை பார்த்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஆழ்ந்த மூச்சு விடுங்கள் மனசும் ரிலாக்ஸாக இருக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com