எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் பத்து பழ வகைகள்!

எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் பத்து பழ வகைகள்!

டலுக்கு உருவத்தைக் கொடுத்து, தசைகளுக்கு பிடிமானமாயிருந்து நம்மை கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கச்செய்யும் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கத் தேவையானவை கால்சியம், வைட்டமின் டி மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவு மற்றும் தகுந்த உடற்பயிற்சிகளும் ஆகும். கால்சியம் தேவைகளுக்காக பால் பொருட்களை மட்டும் சாப்பிடுவது என்றிராமல், தாவரங்கள் மூலம் கிடைக்கும் கால்சியம் சத்து அடங்கியுள்ள உணவுகளையும் உண்ண வேண்டியது அவசியம். அப்படி, கால்சியம் சத்து அதிகளவில் நிரம்பியுள்ள பத்து உலர் பழங்கள் பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. பாதாம் பருப்பு: இதில் ஒவ்வொரு 28 கிராமிலும் 76 mg கால்சியம், வைட்டமின் E, நல்ல கொழுப்பு மற்றும் தேவையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

2. அத்தி: 100 கிராம் உலர் அத்திப் பழத்தில் ஏறத்தாழ 162 mg கால்சியம் சத்து அடங்கி உள்ளது. மேலும், இயற்கையான இனிப்பு சத்தும் நார்ச்சத்தும் இதில் அடங்கி உள்ளன.

3. பேரீட்சை: 100 கிராம் பேரீட்சையில், அவற்றின் வகைக்கேற்ப 40 முதல் 64 mg கால்சியம் உள்ளது.

4. உலர் பிளம்ஸ்: 100 கிராம் உலர் பிளம்ஸில் 43 mg கால்சியம் சத்து உள்ளது. இது நல்ல செரிமானத்துக்கும் உகந்தது.

5. எள்: 100 கிராம் எள்ளில் 989 mg கால்சியம் சத்து உள்ளது. இதை சமையல் உணவுப் பொருட்களிலும், சாலட்டில் சேர்த்தும் உண்ணலாம்.

6. சியா (Chia) ஸீட்ஸ்: 100 கிராம் சியா விதைகளில் 631 mg கால்சியம் சத்து உள்ளது. மேலும், அதிக அளவில் ஒமேகா 3 என்னும் நல்ல கொழுப்பு அமிலமும் நார்ச் சத்துக்களும் அடங்கிய அற்புதமான உணவு இது.

7. சூரியகாந்தி விதைகள்: ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரோட்டீன் அடங்கிய இந்த விதைகளில், ஒவ்வொரு 100 கிராமிலும் ஏறக்குறைய 80 mg கால்சியம் சத்து உள்ளது.

8. பிஸ்தாச்சியோ: அதிக சத்தும் சுவையும் நிறைந்த இதில், ஒவ்வொரு 100 கிராமிலும் சுமார் 131 mg கால்சியம் சத்து உள்ளது.

9. வால்நட்: அதிக அளவில் ஊட்டச் சத்துக்களும் ஒமேகா3 என்னும் நல்ல கொழுப்பு அமிலமும் அடங்கிய இக்கொட்டைகளில், கால்சியம் ஒவ்வொரு 100 கிராமிலும் 98 mg உள்ளது.

10. பிரேஸில் நட்: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்ல செலீனியம் என்னும் பொருளை அதிகளவில் கொண்டுள்ள இக்கொட்டைகளில், ஒவ்வொரு 100 கிராமிலும் 160 mg கால்சியம் சத்து உள்ளது.

மேற்கூறிய உலர் பழ வகைகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் உறுதியும் ஆரோக்கியமும் பெறுவதுடன் முழு உடம்பும் ஆரோக்கியம் பெறுவதும் உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com