பாகல் இலையும் ஒரு கீரைதான் என்பது நம்மில் பலரும் அறியாதது. சொல்லப்போனால் பாகற்காயைக் காட்டிலும் அதிக சத்துக்கள் இதில்தான் உள்ளன என்பதே உண்மை.
பாகற்காய் இலையை கொதிக்க வைத்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறிவிடும். இதனால் இரத்தம் மட்டுமின்றி, குடல் பகுதியும் சுத்தமாகும்.
பாகல் இலையில், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியமும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 2 மடங்கு பொட்டாசியமும் உள்ளது. இது நம்முடைய தசை வலிமை, எலும்பு மற்றும் பற்களின் வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்கு உதவுகிறது.
இரண்டு ஸ்பூன் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காச நோயை மட்டுப்படுத்தும்.
சருமத்தில் புண்கள், கட்டிகள் இருந்தால் வைட்டமின் சி, ஆன்டிபயாடிக் நிறைந்த பாகற்காய் இலையின் சாறு அரைத்து தடவி வரலாம். இது காயத்தில் சீழ் பிடிக்காமல் தடுப்பதோடு, காயம் விரைவில் ஆறவும் உதவுகிறது.
பாகற்காய் இலைகளை தண்டுடன் எடுத்து உலர வைத்து பொடியாக்கி, அவற்றை காயங்கள், புண்கள் மீது தூவினால் விரைவில் ஆறும்.
காலரா நோயால் அவதிப்படுபவர்கள், பாகல் இலைச் சாற்றை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் நல்லெண்ணெயை கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
முகத்தில் பருக்கள் இருப்பவர்கள், பாகல் இலையைக் கசக்கி சாறு எடுத்து, அதை பருக்களின் மீது தடவி வந்தால், விரைவில் பலன் கிடைக்கும். அதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி பயாட்டிக்குகள் பருக்களை நீக்க உதவுகின்றன.
பாகல் இலைகளைக் கழுவி சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அந்தச் சாறினை மட்டும் குடித்து வந்தால், இரைப்பை மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குணமாகிறதாம்.
இரண்டு ஸ்பூன் பாகல் இலையின் சாற்றுடன் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் கடுமையான வைரஸ் காய்ச்சல் கூட உடனடியாக குணம் அடையும்.
இது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிக அளவில் சுரக்கவும் உதவுகிறது.