
இன்றைய காலகட்டத்தில் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, அவசர நிலைகளில் செயல்களில் இறங்குவது என மிகவும் வெறுப்பாகவும், சோர்வாகவும் இருக்கும். இது போன்ற சமயத்தில் இயற்கையான முறையில் அதை எப்படி குறைக்கலாம் என்பதையும், அதற்குரிய 5 வழிகள் என்ன என்றும் பார்க்கலாம்.
1) தீர்வுகளில் கவனம்:
பிரச்னை இல்லாத நபர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் வாழ்வில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றால் அந்த பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக மன அழுத்தம் இல்லாத நபர்களைப் போல் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தவும். இந்த மனநிலையால் சவால்களை நேர்மறையான மனநிலையுடன் அணுகலாம். தடைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக பார்க்கலாம். இதனால் சிறிது மன அழுத்தம் குறையும்.
2) செயலில் திட்டமிடுங்கள்:
எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு பிளான் பண்ணி செய்ய வேண்டும்.
அவ்வாறு திட்டமிட்டு செய்யும் பொழுது நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அடுத்து என்ன செய்யலாம்? உங்களின் நிலை என்ன? உங்கள் இலக்கு எந்த கட்டத்தில் உள்ளது? என பல்வேறு பதட்டங்களிலிருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் தப்பிப்பதற்கு சரியாக திட்டமிடுதல் ஒரு சரியான வழிமுறையாகும்.
3) முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்:
எந்த ஒரு சூழ்நிலையும் மனநிலையை பாதிக்காது என்ற எண்ணத்தை நம் மனதில் விதைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சிறு நிகழ்வு கூட நம் மனநிலையை உடைத்து விடும்.
இதனால் அன்றைய நாள் மிக மோசமாக கூட செல்லும். அதனால் உங்கள் மனநிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கான முன்னெச்சரிக்கை உடன் திட்டமிட்டு இருங்கள்.
4) வெளியில் சென்று நேரத்தை செலவிடுங்கள்:
இன்றைய சூழலில் செல்போன், டி.வி, கம்யூட்டர் தொழில்நுட்பம், என நவீன மயத்தால் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளோம். செயற்கையான பொழுது போக்கை துரத்திவிட்டு, இயற்கையான நேரத்தில் குடும்பத்துடன் அல்லது நண்பர்கள் குடும்பத்துடன், குழந்தைகளிடம் சென்று சிரித்து பேசி மகிழ்ந்து நேரத்தை செலவிடுங்கள்.
பூங்கா, கடற்கரை, நடைப்பயணம், மற்ற பிடித்த இடங்கள் என வெளியில் செல்லும் போது, உடல், மனம் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும். இதனால் மன பாரம் குறையும்.
5) இசையைக் கேளுங்கள்:
நம்மில் நிறைய பேருக்கு தொலைக்காட்சி, மற்றும் திரைப்படங்கள் பிடிக்காது என்று இருப்போம். ஆனால், இசை பிடிக்காத மனிதர்கள் யாரும் இல்லை.
ஒரு இசை நம்மை துள்ளி குதித்து ஆட்டம் போடவும் வைக்கும். அதே இசை தனியாக அறையிலிருந்து கேட்கும் போதும் மன அழுத்தம், மன பதற்றம் போன்றவற்றை குறைக்கவும் சிறந்த வழியாகும்.
மனதை நோகடிக்கும் எதிர்மறை மனிதர்களிடம் இருந்துவிலகுங்கள்!
மனதுக்கு எனர்ஜி தரும் வழிமுறைகளை தேடுங்கள்!
மன அழுத்தம் தரும் எண்ணங்களை உணர்வுகளை தூக்கி எறியுங்கள்!
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூக்கத்தை பழக்கமாக்குங்கள்!
மனவருத்தத்தை குறைக்கும் உற்சாம் தரும் உடற்பயிற்சி, யோகா, ஜாகிங் விளையாட்டில் ஈடுபடுங்கள்!
தினமும் தியானம், நடைப்பயிற்சி, இயற்கை காட்சி என வித்தியாசமானவற்றில் கவனம் செலுத்துங்கள்!
இந்தக் குறிப்புகள் உள்ள பழக்கங்களை வாழ்க்கையில் வழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுத்தம் நீங்கி நல்ல மன நிலை உள்ளவர்களாக மாறலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)