
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் போது நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கும் சவாலான விஷயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்வது தான். அதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய 5 மூலிகைகள் என்னென்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. சிறுகுறுஞ்சான்.
சிறுகுறுஞ்சான் இலை ரத்த சர்க்கரைக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த இலைகளை சிறிது மென்று சாப்பிட்டு விட்டு இனிப்பான உணவை சாப்பிட்டால், அதன் சுவையை உணர முடியாது. எனவே, இதை 'சர்க்கரை கொள்ளி' என்று அழைப்பார்கள். இதில் Gymnemic acid அதிகமாக உள்ளது. இது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் இலைகளை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் சேர்த்துக் குடித்து வருவது நல்லதாகும்.
2. ஆவாரம்பூ.
ஆவாரம் பூவில் Anti diabetic properties உள்ளது. இது சர்க்கரையை ரத்தத்தில் சீராக வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமில்லாலமல் சர்க்கரையால் ஏற்படக்கூடிய சிறுநீரகப் பிரச்னையையும் வராமல் தடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காய்ந்த ஆவாரம் பூவை டீயாக குடிப்பது சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர சிறந்தது.
3. வெந்தயம்.
நம் வீட்டின் சமையலறையில் இருந்து சுலபமாக கிடைக்கக் கூடியது வெந்தயம். இதில் உள்ள கசப்புத்தன்மை மற்றும் நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நாம் சாப்பிடுவதன் மூலமாக வரக்கூடிய சர்க்கரையை ரத்தத்தில் ஏறுவதை தடுக்கும். இதன் மூலமாக ரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தலாம். வெந்தயத்தை முளைக்கட்டியதும் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை நன்கு கட்டுக்குள் வரும்.
4. நாவல் கொட்டை.
நாவல் கொட்டையில் jamboline மற்றும் Jambosine இருக்கிறது. இது சிறந்த Anti diabetic property ஆக செயல்படுகிறது. ரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தும். அதுமட்டுமில்லாமல் ஆன்டி ஆக்ஸிடென்ட் Properties இருக்கிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இதை பொடி செய்து வைத்துக் கொண்டு டீயாக காலை, மாலை இருவேளை அருந்தி வர ரத்த சர்க்கரை கட்டுக்குள் வரும்.
5. வேம்பு இலை.
வேம்பு இலை கசப்புத்தன்மை கொண்டது மட்டுமில்லாமல் நல்ல மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். இதில் Nimbin மற்றும் Nimbolide போன்ற Components உள்ளன. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் ரத்தத்தையும் நன்கு சுத்தப்படுத்தும். நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் பத்து இளம் வேப்பிலையை மென்று சாப்பிட்டு வர, ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.