குப்பைமேனியில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்!

The amazing medicinal properties of Garbageman
The amazing medicinal properties of Garbageman
Published on

குப்பைமேனி என்பது குப்பை மேட்டிலும் சாலையோரங்களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைத் தாவரம். ஆனால், இதில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களோ மிக ஏராளம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

குப்பைமேனியில் உள்ள ஸ்ட்ராங் ஆன்டி இன்ஃபிளமேட்ரி குணமானது வீக்கத்துடன் வலியும் தரக்கூடிய ஆர்த்ரிடிஸ், ருமாடிசம் போன்ற நோய்த் தாக்குதலில் இருக்கும்போது வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவும். சில வகையான காயங்கள், தலைவலி இருக்கும்போது குப்பைமேனி வலி நிவாரணியாக செயல்பட்டு அசௌகரியத்தையும் வலியையும் குறைக்கக் கூடியது. செல்களைப் புதுப்பித்தும், வீக்கத்தைக் குறைத்தும் காயங்களை விரைவில் ஆற்ற வல்லது. அரிப்பு, தடிப்பு, சொறி, சிரங்கு போன்ற சரும வியாதிகளை விரைவில் குணமாக்கும்.

குப்பைமேனியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் தீமை தரக்கூடிய ஃபிரீ ரேடிகல்கள் மூலம் செல் சேதமடைவதைத் தடுக்கிறது. ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது. உடல் முதுமை நிலை அடைவதை தாமதப்படுத்துகிறது. இதிலுள்ள லார்விசிடல் (larvicidal) மற்றும் ஓவிசிடல் (ovicidal) குணங்களானது கொசு உற்பத்தியாவதைத் தடுத்து, கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்கள் வராமல் பாதுகாக்கின்றன.

குப்பைமேனியின் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் குணமானது, சருமம், மூச்சுக் குழாய் மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்றுநோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடி நோய் வராமல் தடுக்கிறது. இதிலுள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மையானது, நம் குடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுத்து, தான் உண்டு வளரும் கெட்ட புழுக்களையும், பாரசைட்களையும் (parasite) கொன்று வெளியேற்றும் வேலையை திறம்படச் செய்யும் வல்லமை கொண்டது. வயிற்றின் உட்புற சருமத்தைப் பாதுகாத்து அல்சர் வருவதைத் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சீராக்கி மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் உதவி புரிகிறது.

இதையும் படியுங்கள்:
மனச்சோர்வை நீக்கும் உணவுகள்!
The amazing medicinal properties of Garbageman

பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிடும்போது அவற்றின் விஷத்தை முறித்து விடுவதில் குப்பைமேனி அதிக ஆற்றல் உடையது. சித்த மருத்துவத்தில் பாம்புக்கடிக்கு தயாரிக்கும் மருந்தில் சேர்க்கும் பொருட்களில் குப்பைமேனியின் பங்கு அதிகம்.

குப்பைமேனி இலையை பவுடர் ஆக்கியும், சாறு பிழிந்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சியும், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், சுடு நீருடன் கலந்தும் பல விதங்களில் உபயோகித்து, உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்த முடியும். இதன் மருத்துவ குணங்கள் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மிக ஸ்ட்ராங் ஆக இருப்பதால் மருத்துவரை கலந்தாலோசித்த பின்பே இதை உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com