sleep
sleep

தலையணை அவசியமா? இல்லையா? நல்ல தலையணையை தேர்வு செய்வது எப்படி?

Published on

தலையணை இன்றி தூக்கம் வராது என்று சொல்பவர்கள் பலபேர் உண்டு. தலையணையை தலைக்கு வைத்து தூங்கும் போது இதமான ஆழ்ந்த உறக்கம் வரும். ஆனால், தலையணை இன்றி தூங்கும் போது முதுகுதண்டுக்கு நல்லது என்றும் கூறுபவர்கள் உண்டு. இந்த பதிவில் தலையணை வைத்து தூங்குவது நன்மையா அல்லது தீமையா? என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

1. தலையணை இல்லாமல் தூங்குவது முதுகெலும்பின் இயக்கத்தை சீராக நடைப்பெறுவதற்கு உதவும். மொத்தமான தலையணையை பயன்படுத்தி தூங்கும் போது கழுத்தை மேல் நோக்கி சாய்த்து வைக்க வேண்டியிருக்கும். அது நம்முடைய உடலின் அமைப்பிற்கு இடையூராக இருக்கும். தலையணை இன்றி தரையிலோ அல்லது மெத்தையிலோ உடலை வளைக்காமல் தூங்கும் போது முதுகெலும்பில் அழுத்தமோ, வலியோ ஏற்படாது.

2. தலையணை இன்றி தூங்கும் போது கழுத்தில் உள்ள அழுத்தத்தை குறைக்கும். உயரமான தலையணையை பயன்படுத்துவது முதுகெலும்பிற்கு அசௌகரியத்தை உண்டாக்கும். சரியாக தூக்கம் வராமல் நாள்பட்ட கழுத்து வலியுடன் இருப்பவர்கள் தலையணையை தவிர்ப்பது நல்லது.

3. சில பேருக்கு குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கு பக்கவாட்டில் தலையணையை அணைத்தப்படி தூங்குவார்கள். இன்னும் சிலர் அண்ணாந்து பார்த்தப்படி தூங்குவார்கள். இப்படி எந்த விதத்தில் தூங்கினாலும் முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும். முதுகெலும்பை பராமரிப்பதற்கு ஏற்ற மெத்தையை பயன்படுத்துவது நல்லது.

4. தலையணையை பயன்படுத்தாமல் பக்கவாட்டு பகுதியில் படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தூக்கத்தில் சிரமத்தை எதிர்க்கொள்ள நேரிடும். தலைப்பகுதி மற்றும் முதுகெலும்பு பகுதிகளுக்கு ஆதரவு தேவைப்படும். அவை இரண்டும் நல்ல நிலையில் இருந்தால், நமக்கு சீரான தூக்கம் வரும். அவ்வாறு ஆதரவு இல்லாமல் இருக்கும் போது கழுத்து, தோல்ப்பட்டை வலி, தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும்.

5.தலையணை பயன்படுத்தி தூக்கம் வராமல் இருக்கும் போது கழுத்துப்பகுதியில் அசௌகரியமாக உணர்ந்தால், துண்டை உருட்டி வைத்துக் கொண்டு தூங்கலாம். தொடர்ந்து தலையணை பயன்படுத்தும் போது அசௌகரியமாக உணர்ந்தால் தலையையும், கழுத்தையும் தாக்குப்பிடிக்கும்படி இருக்கும் தலையணையை வைத்துக் கொள்வது நல்லது.

கழுத்து வலி, குறட்டை பிரச்னை உள்ளவர்களுக்கு வேறுவிதமான தலையணைகள் இருக்கின்றன. நிபுணர்களின் வழிக்காட்டுதலுடன் உங்களுக்கு ஏற்ற தலையைணையை தேர்வு செய்து பயன்படுத்துவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க... கதைகள் சொல்லுங்க சார்!
sleep

தலையணையை எப்படி தேர்வு செய்வது?

நல்ல தலையணையை நாம் தூங்கும் நிலை, உடல் அமைப்பு, நம்முடைய சௌகரியம் போன்றவற்றை வைத்தே தேர்வு செய்ய முடியும். பக்கவாட்டில் திரும்பி தூங்குபவர்களுக்கு நல்ல மெத்தமான தலையணை தேவைப்படும். இதுவே, வயிறு தரையில் படும்படி தூங்குபவர்களுக்கு மென்மையான தலையணை போதுமானதாகும்.

Memory foam, latex, cotton போன்ற பலவிதமான தலையணைகள் இருக்கின்றன. இந்தியாவில் பருத்தியால் ஆன தலையணையையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். ஏனெனில், இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், நல்ல தூக்கம் வரக்கூடியதாகவும், விலையும் குறைவாக இருப்பதால் பருத்தியால் ஆன தலையணையை வாங்கவே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற முதல் பொருள் எது? தெரியுமா? தெரியாதா?
sleep
logo
Kalki Online
kalkionline.com