தினசரி அரிசி சார்ந்த உணவுகளை மட்டுமே சாப்பிடும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை! 

Rice
The Dangers of Consuming Rice Foods Every Day

உலகெங்கிலும் உள்ள பல மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். குறிப்பாக ஆசிய மக்கள் தினசரி சோறு இல்லை என்றால் அவர்களுக்கு அந்த நாளே ஓடாது. இருப்பினும் தினசரி அரிசி சார்ந்த உணவுகளையே உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் தினசரி அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்களைத் தெரிந்து கொண்டு அதைக் குறைத்து சாப்பிட வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். 

தினசரி அதிகமாக அரிசி சார்ந்த உணவுகளையே சாப்பிடுவது ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். அரிசியில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும் அதில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே அரிசி உணவுகளைக் குறைத்துக் கொண்டு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

அரிசியில் அதிகமாக இருப்பது கார்போஹைட்ரேட்தான். எனவே இதை அதிகமாக உட்கொண்டு வந்தால் சர்க்கரை அளவு அதிகரிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்வது அவர்களது சுகாதாரக் கவலைகளை அதிகரிக்கலாம். 

அரிசி அதிகப்படியான கலோரி நிறைந்த உணவாகும். அதிகமாக உட்கொள்ளும்போது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக கலோரி உள்ளடக்கம் காரணமாக உடல் பருமன், இதய பிரச்சனைகள், நீரிழிவு போன்ற பல்வேறு விதமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியில் துளி அளவு கூட நார்ச்சத்துக்கள் இல்லை. எனவே இவற்றை உட்கொள்வதால் மலச்சிக்கல், குடல் பாதிப்புகள் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படும். 

இதையும் படியுங்கள்:
கோதுமை உணவை விட, அரிசி உணவு ஆரோக்கியத்தில் எந்த வகையிலும் குறைந்ததில்லை!
Rice

அரிசி சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது அரிதானது என்றாலும் சில நபர்களுக்கு இதனால் ஒவ்வாமை ஏற்படும் அபாயம் உள்ளது. சில நபர்களுக்கு சருமப் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் அல்லது உடலில் அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டும் வாய்ப்புள்ளது என்பதால், இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக சுகாதார நிபுணரை அணுகவும். 

என்னதான் இந்தியாவில் பரவலாக அரிசி உணவு சாப்பிடப்பட்டாலும், இதன் பாதகங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே உங்கள் உணவில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொண்டு, அதில் ஒரு பகுதியாக மட்டுமே அரிசி சார்ந்த உணவுகளை சாப்பிடுவது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com