நீங்க அதிகமா நகம் கடிக்கிறீங்களா? ஜாக்கிரதை! 

The Dangers of Frequent Nail-Biting Habit
The Dangers of Frequent Nail-Biting Habit

அடிக்கடி நகம் கடித்தல் என்பது பலருக்கு இருக்கும் பொதுவான பழக்கமாக இருந்தாலும், அது முற்றிலும் தவறானதாகும். சிலர் எதையாவது சிந்திக்கும்போது நகத்தை கடித்துத் துப்புவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு செய்வது அவர்களின் ஆரோக்கியத்தில் பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இப்பதிவில், அடிக்கடி நகங்களைக் கடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அதை நிறுத்துவதற்கான அவசியத்தைப் பற்றி பார்க்கலாம் வாங்க. 

விரல்கள் பாதிக்கப்படும்: அடிக்கடி நகங்களைக் கடிப்பதால், விரல்கள் பாதிக்கப்பட்டு பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது விரல்களில் வீக்கத்தை ஏற்படுத்தி அதிக வலிக்கு வழிவகுக்கும். நகங்களை கடித்த பின்னர், விரலின் மென்மையான பகுதிகள் வெளிப்படுவதால், அவை எளிதாக பாக்டீரியா தொற்றுக்களுக்கு உள்ளாகும். நகத்தைக் கடிக்கும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தொடர் ஈரப்பதம் காரணமாக, விரல்கள் பூஞ்சை தொற்றுக்கு உள்ளாகலாம். 

பல் பிரச்சனைகள்: நகம் கடிப்பது பல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகம் கடிப்பதால் உங்கள் பற்கள் மற்றும் தாடையில் ஏற்படும் நிலையான அழுத்தம் காரணமாக, பற்களின் ஒழுங்குமுறை மாறுதல் மற்றும் தாடை பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக இந்த செயல்பாடு உங்கள் பற்கள் மற்றும் தாடை மூட்டுகளை சேதப்படுத்தும் என்பதால், நகம் கடிப்பதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். 

கிருமிகளின் பரவல்: நமது கைகள் நாள் முழுவதும் பல இடங்களுடன் தொடர்பு கொள்கின்றன. எனவே எளிதாக கிருமிகளுடன் வெளிப்படுவதால், நக இடுக்குகளில் கிருமிகள் இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே ஒருவர் தனது நகத்தை கடிக்கும்போது அந்த கிருமிகள் வாய்க்குள் சென்று சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தொற்று போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

உளவியல் தாக்கம்: நகம் கடிப்பதென்பது பெரும்பாலும் மன அழுத்தம், பதட்டம் மற்றும் வாழ்க்கையில் விரக்தி போன்றவற்றுடன் தொடர்புடையது. இது உங்களுக்கு உணர்வு சார்ந்த சிக்கல்களை அதிகரிக்கலாம். இது காலப்போக்கில் தவிர்க்க முடியாத தீய பழக்கமாக மாறும் வாய்ப்புள்ளது. 

நகம் கடிப்பதை எப்படி நிறுத்துவது? 

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது மிகவும் முக்கியமானது.

  • நகம் கடிக்கும் ஆசையை குறைப்பதற்கு, முன்கூட்டியே நகத்தை சிறியதாக வெட்டி விடுங்கள். 

  • மன அழுத்தத்தைக் குறைக்கும் பந்துகள், ஃபிஜட் ஸ்பின்னர் அல்லது பிற செயல்பாடுகளில் உங்கள் கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

  • நகம் கடிப்பதைத் தடுக்க கசப்பான நெயில் பாலிஷ் பயன்படுத்துங்கள். 

  • தேவைப்பட்டால், ஒரு முறையான தொழில் வல்லுனர்களின் அறிவுரையைப் பெறுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
Handbag வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
The Dangers of Frequent Nail-Biting Habit

இந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால், நகம் கடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடும். அதே நேரம் உங்கள் ஆரோக்கியத்திலும் பாசிட்டிவ் விளைவுகள் ஏற்படும் என்பதால், இந்த தீய பழக்கத்தை இன்றே விட்டொழிக்க முயற்சி செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com