
1. சமையலில் முடிந்தளவுக்கு இஞ்சி சேருங்கள். இஞ்சியில் உள்ள வேதிப்பொருட்கள் கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உடலில் தோன்றும் கேன்சர் செல்களை மட்டும் அழித்து நல்ல செல்களை மட்டும் அப்படியே உடலில் இருக்கச் செய்யும் ஆற்றல் உடையது இஞ்சி என்பதை அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது புற்றுநோய் சிகிச்சையில் செய்யப்படும் கீமோதெரபி மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையை விட மேலானது என்கிறார்கள்.
2. வாரம் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் கொய்யாப்பழம் இரண்டை சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். தினமும் ஒரு கொய்யாப்பழம் பகலில் சாப்பிட்டால் முழங்கால் , மூட்டு வலி மற்றும் முதுகு வலியை தவிர்க்கலாம் என்கிறார்கள் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
3. வாரத்திற்கு இருமுறை மூன்று வெள்ளைப் பூண்டை பச்சையாக உட்கொண்டால் நுரையீரல் புற்றுநோய்யை உறுதியாக தடுக்கலாம் என்கிறார்கள் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். நுரையீரல் மட்டுமல்ல பெருங்குடல் புற்றுநோயையும் தடுக்கிறது என்கிறார்கள்.
4. ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு மாதுளம் பழம் தினமும் சாப்பிடுகின்றவர்களுக்கு டாக்டரே வேண்டாம். இவைகளிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஒன்றிணைந்து நோய்களுக்கு காரணமாக அமையும் தீய அணுக்களை அழிப்பதால் ஆரோக்கியம் கெடுவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
5. தினமும் இரண்டு கப் தயிர் உப்பு போடாமல் சாப்பிட்டால் உடலிலுள்ள கொழுப்பு கரையும் என்கிறார்கள் டென்னிஸி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதோடு தினமும் தயிர் சாப்பிடுகின்றவர்களுக்கு உயர் அழுத்த பிரச்சினை வராது என்கிறார்கள்.
6. உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் மாங்கனீசு தாதுப்பை பெற ஒரு கப் அன்னாசிப் பழத்துண்டுகளை ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7. ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக எட்டு மணி நேரம் தூங்கி எழுந்தாலே அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட்டு தகுந்த நிவாரணம் பெறலாம் என்கிறார்கள் அமெரிக்க தூக்கவியல் மருத்துவ நிபுணர்கள்.
8. தினமும் பகலில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை படுத்து தூங்கி ரிலாக்ஸ் செய்கின்றவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள் மேலும். இரவில் நன்றாக தூங்குவது நினைவாற்றலை அதிகரிக்கும் என அமெரிக்க ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
9. சிகப்பு திராட்சை சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும், ரத்த அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு வருவது தடுக்கப்படும் , மேலும் ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து டயபடீஸ் ஆபத்தையும் குறைக்கும் என, ஸ்பெயின் மேட்ரிட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
10. முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற பூ வகை காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களை அச்சுறுத்தும் இரண்டாவது பெரிய நோயாக இருக்கும் மார்பக புற்றுநோய், வராமல் தடுக்கப்படுகிறது. காரணம் இந்த காய்கறிகளில் உள்ள ஐசோதையோசையனேட்ஸ் தான் என்கிறார்கள் கலிபோர்னியா சான்டா பார்பரா ஆய்வக ஆராய்ச்சியாளர்கள்.
11. பாகற்காய் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதாக செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் செல்கள் அழிவதோடு, அது மேலும் பெருகுவதை தடுப்பதாக கண்டறிந்துள்ளனர்.
12. தேங்காய்யை துருவி பாலில் கலந்து குடித்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் தேங்காய் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்கிறார்கள் மலேசியா மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
13. அதிகமாக சிந்தித்தால் மூளை மிகவும் சோர்ந்து விடும் என்கிறார்கள் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதிகமாக சிந்திப்பதால், தொடர்ந்து கவலைப் படுவதால் மூளையில் உள்ள குளுக்கோஸ் அளவு 30 சதவீதம் குறைந்து போகின்றதாம். இதனை சரி செய்ய புரதம் அல்லது மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு சரி செய்ய வேண்டும் என்கிறார்கள்.
14. உடல் சோர்வு, மூட்டு வலி இருப்பவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள் பிரிட்டன் நார் தும்பிரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். செர்ரி பழத்தில் உள்ள ஆந்தோசைனின்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலின் சோர்வடைந்த சதைப்பகுதி விரைவாக புத்துணர்ச்சி பெற உதவுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.