பறவைகளை ரசிப்பதால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!


The health benefits of admiring birds!
Health Benefits!
Published on

ம்மில் பலருக்கு பறவைகளை ரசித்து அதன் அழகைக்கண்டு சந்தோஷப்படும் குணம் உண்டு.  நாம் வாழும் இந்த அவசர காலக்கட்டத்தில் நம்மை சோர்விலிருந்து விடுபட வைத்து மனதை அமைதிப்படுத்துவதே  பறவைகள் ரசிப்புப் பழக்கம். இது இயற்கையோடு  நம்மை பிணைக்கிறது.

எப்போதும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பவரா?. கையில் பைனாகுலர் வைத்துக்கொண்டு வெளியிடங்களில் பறவையை ரசிக்க ஆரம்பித்தீர்களானால்  நீங்கள் சுறுசுறுப்பை உணர்வீர்கள்.  கவர் கலரான பறவைகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

Biophillia என்றால் என்ன தெரியுமா?.  இயற்கையோடு இணைந்திருக்கும்  செயலே பயோஃபிலியா ஆகும். சிறிது சிறிதாக நீங்கள் பறவைகளின் வாழ்க்கைமுறை மற்றும் குணங்களை ஆராய முற்படுவீர்கள்.  எல்லோருக்கும் சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இதனால் ஏற்படும். பறவைகளை ரசிப்பது நமக்கு மட்டும் நல்லதல்ல. இந்த அன்னை பூமிக்கும் இது நல்லதாகும்.

நாம் எல்லோரும் சமூகத்தில் இணைந்து இருப்பவர்கள்.  உங்களைப் போன்று பறவை ரசிப்பதில் ஈடுபடுபவர்களை  தொடர்பு கொண்டு விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்து மகிழலாம். அது மட்டுமல்லாமல் செமினார் ப்ராஜெக்ட் என்று ஈடுபாடு  நமக்குள் விரிவடைந்து சாதிக்கத் தோன்றும்.

நீங்கள் தெருவில் செல்லும்போது பயணத்தின் போதோ அல்லது ஒரு பார்க்கிலோ வண்ணமயமான பறவையைக் கண்டு அதை ரசிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ஒவ்வொரு பறவையும் வித்யாசமாக இருப்பதால் அவற்றைப் பற்றி நன்கு அறிய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. 

இதையும் படியுங்கள்:
அன்றாடம் செய்யும் பணிகளையே உடற்பயிற்சியாக மாற்றி வாழலாமா?

The health benefits of admiring birds!

நாம் ஒவ்வொரு பறவையையும் அதன் பழக்க வழக்கங்களையும் கவனிக்கும்போது  நமக்கு பொறுமையும் ஊக்கமும் ஏற்படுகிறது. 

ஒவ்வொரு பறவையின் நிறம் ஒலி மற்றும் அதன் பறக்கும் தன்மை இவைகளை நாம் கூர்ந்து கவனிக்கும்போது  நம் கவனத்திறமை  கூர்மையாவதை உணர்வோம். 

நாம் பறவைகளின் இனிமையான ஒலியைக் கேட்கும்போது நாம் எந்த பிரச்னைகள் பற்றியும் நினைப்பதில்லை. அவற்றுடன் ஒன்றிவிடும்போது மனதிற்கு ஒருபூரணத்துவமும் அமைதியும் கிடைப்பதை உணர்வீர்கள். விலை கொடுத்து வாங்க முடியாத இந்த அமைதி இயற்கை மூலம் கிடைக்க கண்டிப்பாக அனைவரும் பறவைகளை ரசிப்பதை வழக்கமாக்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com