The health benefits of Mudakathan Keerai
The health benefits of Mudakathan Keeraihttps://tamil.webdunia.com

முடக்கத்தான் கீரையின் ஆரோக்கியப் பலன்கள்!

Published on

ரோக்கியம் தரும் பல்வேறு கீரைகளில் முடக்கத்தான் கீரையின் பங்கு முக்கியமானது. முடக்குவாதத்தை நீக்கும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. நம் உணவில் இந்தக் கீரையை சேர்ப்பதால் ஏற்படும் சில பலன்களை இந்தப் பதிவில் காண்போம்.

* முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும வியாதிகள் குணமாகும்.

* இந்தக் கீரையை அரைத்து சருமத்தில் பூசி வந்தாலும் சரும நோய்கள் குணமாகும்.

* முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராததுடன், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குடலிறக்கம் குணமாகும்.

* முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும்.

* குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை அரைத்து அடிவயிற்றில் பூசினால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

* முடக்கத்தான் கீரை வாய்வு தொல்லையை நீக்கி மலச்சிக்கலை தீர்க்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் 50 பிளஸா? இனிமையான செகண்ட் இன்னிங்ஸ் உங்களுக்குத்தான்!
The health benefits of Mudakathan Keerai

* இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டுவலியை சரிசெய்கிறது. முடக்கத்தான் கீரை சூப் உடலுக்கு மிகவும் நல்லது.

* முடக்கத்தான் கீரையை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு ரசம், சாம்பார் என பலவிதமான பதார்த்தங்களில் சேர்த்து கலந்து விட்டு உண்டு வர பல நற்பலன்களைத் தரும்.

* முடக்கத்தான் கீரை நரம்புத் தளர்ச்சியை நீக்கி, நரம்புகள் வலிமை பெற உதவும்.

logo
Kalki Online
kalkionline.com