

திராட்சை என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கு வருவது அதனுடைய புளிப்பு சுவை தான். தற்போது சந்தையில் விதை உள்ள திராட்சை, விதையில்லாத திராட்சைகள் கிடைக்கின்றன. நிறைய பேர் சாப்பிடுவதற்கு ஈஸியாக இருக்கும் என்பதற்காக விதையில்லாத திராட்சை பழத்தை வாங்கி சுவைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது விதையுள்ள திராட்சை பழத்தில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்று.
திராட்சைப் பழத்தின் சதை மட்டுமல்லாது, அதன் தோலும் விதையும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குறிப்பாக கருப்பு திராட்சை விதையில் (Grape Seed), ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் புரோ-ஆன்தோசயனிடின்கள் (Proanthocyanidins) நிறைந்ததுள்ளது. இது இதய ஆரோக்கியம், இரத்த ஓட்டம், வீக்கத்தைக் குறைத்தல், புற்றுநோய் எதிர்ப்பு, மற்றும் சருமப் பாதுகாப்பு போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது; இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் கரைக்கவும், இரத்தக் குழாய்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
திராட்சை விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம், அல்லது பொடியாக்கி உணவில் சேர்க்கலாம். திராட்சை விதை சாறு (Grape Seed Extract - GSE) மாத்திரைகளாகவும், பொடியாகவும் கிடைக்கிறது. விதைகளை வெந்நீரில் ஊறவைத்து குடிக்கலாம். திராட்சைப் பழங்களுடன் விதையையும் சேர்த்து மென்று சாப்பிடலாம் (குறிப்பாக கருப்பு திராட்சை).
* உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை (Grape Seed) மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன.
* உடல் பலவீனம், மூட்டு வலி, கால் வலி போன்ற அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் கருப்பு திராட்டை விதை மிகவும் நல்லது.
* திராட்சை விதைகளில் அதிகளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கவும் உதவுகிறது.
* இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செல்களைப் பாதுகாக்கின்றன.
* உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மூளை செல்களைப் பாதுகாக்கிறது, நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பைத் தடுக்கிறது.
* இரத்தக் குழாய்களில் உள்ள கொலாஜனைப் பாதுகாத்து, இரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது, இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்குகிறது, கொழுப்பைக் கரைக்கிறது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
* திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகின்றன. இதன் மூலம் உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் சரும அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.
* கருப்பு திராட்டை சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து விதைகளை சாப்பிடுவதன் மூலம் மாலைக்கண் நோய், கண்புரை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
* வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று சாப்பிடுவது நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது.
* இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
* கால் மரத்து போகுதல், சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் என அனைத்திற்கும் கருப்பு திராட்சை விதையை சாப்பிடலாம்.
* திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதைகளை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.
திராட்சை விதை சாறு பல நன்மைகளை அளித்தாலும், மருத்துவ ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)