
நம் உடல் உறுப்புக்கள் எல்லாமும் மிக முக்கியமான உறுப்புகள்தான். ஆனால் அதில் சில உறுப்புக்கள் நாம் மிக மிக கவனம் செலுத்த வேண்டிய உறுப்புகளாக இருக்கும். அதில் முக்கியமான ஒன்றுதான் கைகள். ஏனென்றால், கைகள்தான் நம் உடல் முழுவதற்கும் ஆதாரமே; கை சுத்தம் இல்லை என்றால் பலவிதமான வியாதிகளும் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது.
கைகளை பராமரிப்பதில் நாம் கொஞ்சம் கவனம் செலுத்துவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாப்பிடும் நேரத்தில் கை கழுவுவோம்; அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு என்று நினைத்துக் கொண்டிருப்போம்; அப்படி அல்ல; நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலையிலும் கையின் மீது கவனம் வைத்து செய்ய வேண்டும்.
நம் வீட்டில், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் நமக்கு உதவியாய் இருப்பது கைகள்தானே. அதை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டாமா? கைகள் மீது கொஞ்சம் கவனம் வைப்பதற்கு கீழ்க்கண்ட தகவல்களை படியுங்கள்.
துணிகளை துவைக்க பயன்படுத்தும் சோப்பு, வாஷிங் பவுடர் போன்றவைகளை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களின் கைகளில் இருக்கும் மென்மைத் தன்மை குறையும். கைகள் சொரசொரப்பாக மாறும். அதனால் துணி துவைத்த பின்பும், பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்த பின்பும் கைகளை நன்றாக கழுவி தண்ணீர் தன்மை போகும் அளவுக்கு துடைத்து விட்டு, ஏதாவது ஒரு வகை மாய்ஸ்சரைசரை பூசிக் கொள்ளுங்கள். இதன் மூலம் கைகளின் மென்மையை பாதுகாக்கலாம்.
பெரும்பாலான டிஷ்பேஸ்ட் வகைகளில் பாத்திரங்களில் இருக்கும் அழுக்கை போக்கும் சக்தி அடங்கி இருக்கிறது. அவைகளை பயன்படுத்தி பாத்திரங்களை துலக்குவது நல்லது. டிடர்ஜென்ட் பயன்படுத்தி பாத்திரங்களை கழுவுகிறவர்கள் நேரடியாக அதனை மென்மையான பாத்திரங்களில் தேய்க்கக் கூடாது. கைகளில் கீறல் விழுந்து விடும். ஸ்பான்ஞ்சை டிடர்ஜென்ட்டில் தேய்த்து விட்டு அதைப் பயன்படுத்தி பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக இத்தகைய பொருட்களில் விஷத் தன்மை கிடையாது. ஆனால் குழந்தைகள் தின்று விட்டாலோ, விழுங்கி விட்டாலோ டாக்டர்களிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள் மென்மையானவை. அவைகளில் நேரடியாக டிடர்ஜென்ட்டை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டாம். கைகளில் கீறல் விழுந்து விடும். டிஸ்பேஷ்ட் பயன்படுத்தி பாத்திரங்கள் கழுவுகிறார்கள். இதனை பயன்படுத்தி பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது லேசாக சுடும் நீரை பயன்படுத்துவது நல்லது. தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை.
கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் கைமீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்களே!