தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
raw coconut
raw coconut
Published on

சிறு வயதில் நாம் தேங்காயை பல்லால் கடித்தோ, உடைத்தோ பச்சையாக சாப்பிடுவோம். கொலஸ்டிரால், மயக்கம் என எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை‌. நவீன சமையலில் தேங்காயை தவிர்க்க ஆரம்பித்ததிலிருந்து அதன் நன்மைகளை பெற முடியாமல் வியாதிகளை ஏற்படுத்தி கொள்கிறோம்.

தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. சமைக்கும் போதுதான் அது கொழுப்பாக மாறுகிறது. உடைத்த அரை மணி நேரத்தில் பச்சையாக சாப்பிடுவதால், அது சகலவிதமான நோய்களையும் குணப்படுத்தும்.

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, அழுக்குகளை நீக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கி உச்சி முதல் பாதம் வரை உறுப்புகளை புதுப்பிக்கும்.

முடிந்தவரை தேங்காயை பச்சையாக உண்ண வேண்டும். குருமா, குழம்பு போன்றவற்றில் சேர்த்து அதிக நேரம் கொதிக்க விடும்போது தான் கொலஸ்ட்ராலாக உடலில் சேர்ந்து தொல்லை கொடுக்கும்.

தேங்காயை துருவி சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக கொடுக்க குடல் வளர்ச்சி தூண்டப்பட்டு அதோடு, நல்ல ஊட்டத்தையும் கொடுக்கும்.

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து ஆயுளை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.

தாய்ப்பாலுக்கு மாற்றாக தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தேங்காய் பாலுடன் சர்க்கரை அல்லது கருப்பட்டி ,தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க ஆரோக்கியம் மேம்படும்.

தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சத்து வேறு எதிலும் இல்லை. பற்கள் மற்றும் எலும்புகளை பாதுகாக்கும் பாஸ்பரஸ் தேங்காயில் அதிகம் உள்ளது.

தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் உள்ளதால் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீரக தொற்று உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண தொற்று குணமாகும்.

பச்சை தேங்காயை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையும். முடியின் பளபளப்பு, சரும சுருக்கங்கள் நீங்கி மேனி எழிலை பாதுகாக்கும். இவ்வாறு பலவித நன்மைகளைக் தரும் தேங்காயை உண்டு ஆரோக்கியம் காப்போம்.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடுவதுதான் பெஸ்ட்! 
raw coconut

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com