மஞ்சள், மஞ்சள் நிறம்தானே?! அது என்ன கருப்பு மஞ்சள்? இது நல்லதா?

Black  turmeric
Black turmeric
Published on

நம் நாட்டில், மங்கலகரமான மஞ்சள் நிறம் கொண்ட பாரம்பரிய மூலிகை உணவு மஞ்சள். தன்னகத்தே கொண்டுள்ள பலவித ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில், தற்போது கருப்பு நிற மஞ்சள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த தனித்துவமான மூலிகை, பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள நற்பண்புகளைப்பற்றி இப்பதிவில் காண்போம்.

கருப்பு மஞ்சளிலிருந்து (Black Turmeric) பெறப்படும் நன்மைகளில் முதன்மையானது அதிலிருக்கும் அதிக அளவு ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வீக்கத்தை விரைவில் குறைப்பதற்கான வலிமை கொண்ட, ‘குர்க்குமினாய்ட்’ என்ற கூட்டுப்பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற நோயின் வீக்கத்தைக் குறைத்து படிப்படியாக, குணமடையச் செய்கிறது.

கருப்பு மஞ்சளில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. அவை ஃபிரீ ரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன. மேலும், முதுமைத் தோற்றம் ஏற்படுவதை தாமதப்படுத்தவும், பற்பல நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.

இதில் அடங்கியுள்ள இம்யூனோமாடுலேட்டரி (immunomodulatory) என்ற குணமானது, நம் உடம்பு தானாகவே தொற்றுக்களையும், நோய்களையும் எதிர்த்துப் போராடி தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளத் தேவையான சக்தியைக் கொடுக்கவல்லது எனக் கூறப்படுகிறது.

கருப்பு மஞ்சள் ஜீரண மண்டல உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை குறைத்து, சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. அஜீரணம், வீக்கம், வாய்வு போன்ற தொல்லைகளிலிருந்தும் விடுபட துணை புரிகிறது.

கருப்பு மஞ்சளில் ஆன்டிமைக்ரோபியல் குணங்கள் உள்ளதென்றும் அவை தீமை விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் உண்டாகும் தொற்றுக்களை நீக்க வல்லவை என்றும் கூறப்படுகிறது.

இதன் பக்கவிளைவாக, இதிலுள்ள அடர் நிறம் கொண்ட நிறமிகள் துணிகளிலும், சருமத்தின் மேற்பரப்பிலும் கறை உண்டாக்கக் கூடும். இக்கறைகள் விரைவில் அழியாத் தன்மை கொண்டவை. அதனால் கையாளும்போது மிகவும் கவனம் தேவை. மேலும், இதை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண மண்டலக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு. குறைந்த அளவில் உபயோகிப்பதே சரியான பலன் தரும்.

இதையும் படியுங்கள்:
மூளை முதுமை: இசை தரும் சிகிச்சையின் ரகசியம்!
Black  turmeric

அலர்ஜி உள்ளவர்கள், ஏற்கெனவே வேறு மருந்துகளை உபயோகித்துக் கொண்டிருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றியே இதை எடுத்துக்கொள்ள அல்லது தவிர்க்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com