முகம், முடி, மூளை என மூன்றையும் பராமரிக்கும் ஒரே ஊட்டச்சத்து!

The only nutrition that maintains the face, hair and brain!
The only nutrition that maintains the face, hair and brain!https://timesofindia.indiatimes.com

வைட்டமின் ஈ என்பது நம்முடைய உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இதன் சக்தி வாய்ந்த தன்மை நமது உடலுக்கு பலவிதமான நன்மைகளைப் பெற்றுத் தருகிறது. அது மட்டுமின்றி, இது ஒரு மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த வைட்டமின் ஈ நம்முடைய முகம், முடி மற்றும் மூளை என மூன்றுக்கும் தேவையான, போதுமான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கி வருகிறது. இது குறித்து இப்பதிவில் சற்று பார்ப்போம்.

வைட்டமின் ஈ குறைபாடு அறிகுறிகள்:

* வைட்டமின் ஈ அதிகம் உள்ளவர்களின் புத்திக்கூர்மை மற்றும் அறிவாற்றல் வழக்கத்தை விடச் சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வைட்டமின் ஈ குறைபாடு நேரடியாக ஒருவரின் அடிப்படை அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கும்.

* ஞாபக மறதி மற்றும் அல்சைமர் போன்ற பிரச்னைகள் வைட்டமின் ஈ குறைபாடுகளால் ஏற்படக்கூடியவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

* வைட்டமின் ஈ குறைபாடு தசைகளை பலவீனமாக்குவதுடன். அதன் தளர்ச்சிக்கும் காரணமாகிறது. அதேசமயம் அது நம்முடைய தசை செல்களில் வைரஸ்களின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.

* வைட்டமின் ஈ குறைபாடு நம்முடைய உடலில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

வைட்டமின் ஈ சத்துக்களின் நன்மைகள்:

சருமப் பாதுகாப்பு: வைட்டமின் ஈ நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது நம்முடைய சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இது நம்முடைய சருமம் வறண்டு போதல் மற்றும் முகத்தில் ஏற்படும் முகப்பரு போன்ற உபாதைகளிலிருந்து நம்மைக் காக்கும். மேலும், சருமம் முதிர்ச்சி அடைவதையும் குறைக்கிறது.

தலைமுடி பராமரிப்பு: கேசத்தின் பராமரிப்புக்காக வைட்டமின் ஈ நிறைந்த உணவுப் பொருட்களை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. அவ்வாறு சேர்ப்பதால் முடி நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட மற்றும் அடர்த்தியாக வளரும்.

கண் பார்வையை மேம்படுத்தும்: வைட்டமின் ஈ அதிமாக உள்ள உணவுகள், கண் பார்வையைப் பாதுகாத்து மேம்படுத்த உதவும். தினமும் உணவில் வைட்டமின் ஈ உணவுகளை சேர்த்துக் கொள்வது, கண்புரை மற்றும் கருவிழி செயலிழப்பு போன்ற முதுமையின் காரணமாக ஏற்படுகின்ற குறைபாடுகளைத் தவிர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் வீட்டை ‘குளுகுளு’வென வைத்திருப்பது எப்படி?
The only nutrition that maintains the face, hair and brain!

இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்: இயல்பாகவே வைட்டமின் ஈ, ஒரு இயற்கையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக இருப்பதால், இதய தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் இரத்த நாளங்களில் இரத்தம் உறைந்து கட்டியாகும் அபாயத்தையும் தடுப்பதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

வைட்டமின் ஈ உணவுப் பட்டியல்: குடைமிளகாய் மற்றும் கீரை வகைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது என்பதுடன் வைட்டமின் ஈ சத்தும் நிறைந்துள்ளது. குறிப்பாக, கீரையில் வைட்டமின்-ஈ சத்து அதிகமாக உள்ளது, இது நம்முடைய உடலுக்குச் சரியான ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது.

இவை தவிர, அவகோடா, வஞ்சிர மீன் மற்றும் கடல் உணவுகள், கொழுப்பற்ற இறைச்சி, முட்டைகள், பாதாம், வேர்க்கடலை போன்ற கடலை வகைகள், சூரிய காந்தி விதைகள், சூரிய காந்தி எண்ணெய், சோள எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், கோதுமை விதை எண்ணெய் போன்ற குறிப்பிட்ட தாவர வகை எண்ணெய் வகைகள் மற்றும் பழச்சாறுகளில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com