கோடைகாலம் முடிந்து குளிர்காலம் தொடங்கினாலே பலரும் பல உடல் உபாதைகளை சந்திப்பது இயல்பாக மாறிவிட்டது. நம் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தநிலையில் தான், நம் முன்னோர்கள் பற்றி யோசிக்க தோன்றும்.
முன் உள்ள காலங்களில், எல்லா நோய்களுக்கும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்து தயாரித்து சரி செய்து விடுவர். உடலிற்கும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், தற்போது சளி, இருமல், காய்ச்சல் என அடிக்கடி மருத்துவரை நாடி, அதிகளவு மருந்துக்களை எடுத்துக்கொள்வதால், பல விதமான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த சவால்களை சமாளிப்பதற்கு வீட்டிலே இயற்கையான முறையில் மருந்துகளை மேற்கொள்வது சிறந்தது.
மாறிவரும் பருவ காலங்களால் சளி, இருமல் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்திலே இதை சரி செய்வது அவசியம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சரி செய்வதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
சளி, இருமல் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்:
ஒரு வெற்றிலை, ஒருஸ்பூன் தேன், சிறிதளவு இஞ்சி இந்த மூன்று பொருட்களை வைத்து தயார் செய்யப்படும் கஷாயம் சளி, இருமலுக்கு உகந்த மருந்து.
கஷாயம் தாயார் செய்யும் முறை:
இந்த கஷாயத்தை தயார் செய்வதற்கு முதலில் வெற்றிலை மற்றும் இஞ்சியை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதை பிழிந்து சாற்றை தனியாகப் எடுத்து அதனுடன் தேனை கலந்தால் கஷாயம் தயார்.
இந்த கஷாயத்தின் நன்மைகள்:
இந்த கஷாயம் சளி, இருமல் மட்டுமல்லாமல் ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.
இந்த கஷாயத்தை மழைக்காலங்களில் வாரம் ஒருமுறையும், சளி இருக்கும் போது மூன்று முதல் ஐந்து நாள்களும் பருகலாம்.
இந்த கஷாயத்தில் வெற்றிலை சேர்ப்பதால் பல வித நன்மைகள் ஏற்படுகிறது. பொதுவாகவே வெற்றிலையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெற்றிலை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:
வெற்றிலை நோய் எதிர்ப்பு சக்தியாகவும், செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோய்க்கும், மலச்சிக்கல்லைப் போக்கவும் உதவுகிறது.
பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வெற்றிலை உதவுகிறது.
மன அழுத்தத்தைப் போக்குவதில் வெற்றிலை பங்கு வகிக்கிறது.
எனவே இந்த கஷாயத்தை பருகுவதனால் சளி, இருமல் மட்டுமில்லாமல் பலவித நோய்களும் குணமாகிறது.