
அரிசி(Rice) என்பது அனைவரின் வீட்டில் காணப்படும் ஒரு தவிர்க்க முடியாத உணவுப் பொருள். ஆனால், அது இன்றைய மாடர்ன் இளைய தலைமுறைகளால் உடல் பருமனைக் காரணம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கப்பட்டு வருகிறது. இது நல்லதா?
தென்னிந்திய உணவுப் பொருட்களில் முக்கியமாகக் கருதப்படுவது அரிசி. குறிப்பாக, தமிழ்நாட்டில் தினமும் பல்வேறு வகைகளில் மக்களால் உட்கொள்ளப்படுகிறது. வேகவைத்த அரிசி, இட்லி, தோசை, பொங்கல் மற்றும் பல... வெள்ளை அரிசியின் பளபளப்பான தோற்றம், அதன் மென்மையான அமைப்பு மற்றும் விரைவாகச் சமைக்க முடிவதால் பலதரப்பட்ட மக்களால் அது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இன்னொரு புறம் சில பாரம்பரிய அரிசி வகைகள் (healthy Rice varieties) அவற்றின் உயர்ந்த ஊட்டச்சத்து, மருத்துவ மதிப்புக்காக இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக நகர்ப்புற மக்களிடம் படிப்படியாகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு மட்டும் 160க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் பல இந்திய அறிவு அமைப்புகள் மையம் (Centre for Indian Knowledge Systems) போன்ற அமைப்புகளால் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
அரிசியில் பொதுவாக காணப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்து அரிசி வகைகளிலும் பொதுவாக கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates), புரதங்கள் (proteins), உணவு நார்ச்சத்து (dietary fiber), வைட்டமின்கள் (குறிப்பாக B-complex), இரும்பு (iron), மெக்னீசியம் (magnesium) போன்ற தாதுக்கள் (minerals) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants) இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் மனிதனுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தி, செரிமான ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறைக்குப் (metabolic regulation) பங்களிக்கின்றன.
இருப்பினும் இந்த ஊட்டச்சத்துக்கள் வெவ்வேறு அரிசி வகைகளுக்கு என்று கணிசமாக வேறுபடுகின்றன. குறிப்பாக சில அரிசி வகைகளை உண்பதால் பல தனித்துவமான நன்மைகளைப் பெறலாம்.
சிறந்த அரிசி (Rice) வகைகள்
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் காணப்படும் ஊட்டச்சத்து நிறைந்த சில முன்னணி அரிசி வகைகள்.
1. மாப்பிள்ளை சம்பா
ஊட்டச்சத்துக்கள்: அதிக அந்தோசயனின்கள்(anthocyanins), பீனாலிக்ஸ்(phenolics), antioxidants, நார்ச்சத்து.
நன்மைகள்: அதிக ஆற்றலைத் தருகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது(lowers glycemic index), இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
2. கருப்பு கவுனி (கருப்பு அரிசி)
ஊட்டச்சத்துக்கள்: அந்தோசயனின்கள்(anthocyanins), இரும்பு(iron), வைட்டமின் ஈ, antioxidants நிறைந்துள்ளன.
நன்மைகள்: அலர்ஜியைத் தடுக்கும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடை இழப்பை ஆதரிக்கிறது, நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
3. கருங்குருவை
ஊட்டச்சத்துக்கள்: அதிக நார்ச்சத்து, antioxidants.
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது, நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது (aids detoxification).
4. காட்டுயானம்
ஊட்டச்சத்துக்கள்: நார்ச்சத்து, தாதுக்கள்(Minerals), Antioxidants.
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது, கொழுப்பைக் குறைக்கிறது, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
5. குல்லாகர்
ஊட்டச்சத்துக்கள்: இரும்பு, துத்தநாகம்(zinc), நார்ச்சத்து.
நன்மைகள்: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது, எலும்பு வலிமையை மேம்படுத்துகிறது.
6. கருடன் சம்பா
ஊட்டச்சத்துக்கள்: நார்ச்சத்து, தாதுக்கள்(minerals).
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)