பகீர் கிளப்பும் கடை இட்லி மாவு!

The shocking shop is Idly flour
The shocking shop is Idly flourhttps://tamil.boldsky.com
Published on

லகின் மிகச்சிறந்த காலை உணவுகளில் முதலிடம் பிடித்த நம்மூர் இட்லியின் சிறப்புகள் எண்ணிலடங்காதது. உடலுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்தது. மிகவு‌ம் குறைந்த செலவில் எளிதாகச் செய்யக்கூடியது. எண்ணெய் ஏதும் கலக்காமல், நீராவியில் வேகவைக்கும் செய்முறையால் ஒரு வயது குழந்தை முதல் வயதான முதியோர் வரை எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதில் ஜீரணிக்கக்கூடியது என்று இட்லியின் இன்றியமையாத பயன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய தலைமுறையினர் பல்வேறு காரணங்களால் வீட்டில் மாவு அரைப்பதையே மெல்ல மறந்து கடைகளில் விற்கும் பாக்கெட் இட்லி மாவை பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது. ரெடிமேட் உணவுகளில் இட்லி மாவுதான் தற்போது அதிகம் விற்பனையாவதாக தரவுகள் சொல்கின்றன. பெட்டிக் கடை முதல் ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

பாக்கெட் மாவின் பாதகங்கள் என்ன?

வீடுகளில் நாம் பின்பற்றும் சுத்தத்தை பெரிய கிரைண்டர்களைப் பயன்படுத்தும் கடைகள் பின்பற்றுகிறார்களா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே! மாவு அரைப்பதற்கும், அரைத்த பிறகு கிரைண்டரை கழுவும்போதும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும்.

மாவு அரைக்கும் தொழிலில் ஈடுபடுவர்கள் மிகவும் கவனமாக கைகளைக் கழுவ வேண்டும். கைவிரல் நகங்களை வளர்க்கவே கூடாது. குறைந்தபட்சம் கையுறையாவது அணிய வேண்டும்.

சரியாக சுத்தம் செய்யப்படாத கிரைண்டர்களில் உருவாகும் ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. (எச்சரிக்கை: ஈகோலி என்னும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும்கூட, முழுமையாக அழியாது!)

வணிக நோக்கில் மாவு அரைக்கும் கிரைண்டர்களைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் ஊற்றிதான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், இவற்றை வாரத்திற்கு ஒரு முறை கழுவுகிறார்களா என்பதே சந்தேகம்தான். மேலும், சுத்தம் இல்லாத கிரைண்டர்களைச் சுற்றி வலம் வரும் எலிகள் மற்றும் பூச்சிகளால் உண்டாகும் எண்ணற்ற தீங்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாவரைக்கப் பயன்படுத்தும் அரிசி, உளுந்து மற்றும் தண்ணீரின் தரம் அடுத்த மிகப் பெரிய கேள்விக்குறி? பெரும்பாலும் தரங்குறைந்த அரிசி, உளுந்து, தண்ணீரே பயன்படுத்தப்படுகின்றன என பரிசோதனைகள் சொல்கின்றன.

சில இடங்களில் அரைக்கும் மாவில் உப்புச் சேர்ப்பதைத் தவிர்க்க, தரமில்லாத உப்பு மிகுந்த தண்ணீரைக் கலந்து மாவு அரைக்கப்படுவதாகச் சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இரவு உணவில் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
The shocking shop is Idly flour

மிக முக்கியமாக, உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிறைந்த வெந்தயத்தை இதுபோன்ற மாவில் அதிகம் சேர்ப்பதில்லை.

இயற்கையாக மாவை புளிக்கச் செய்யும் நுண்ணுயிரிகள் (Bacteria) பொதுவாக நமக்கு நன்மை தருபவை. ஆனால், கடைகளில் கிடைக்கும் மாவு விரைவில் புளித்துப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்களால் செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது. அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படுகின்றன. சொல்லப்போனால், நம் உடலில் இது ஒரு ஸ்லோபாய்சனாக மாறுகிறது.

நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஈரப்பதமான மாவிற்கும் (Wet Batter) தர நிர்ணயச் சான்றிதழ் பெறுவது நடைமுறையில் இல்லை என்பதால் இவை எந்த ஒரு ஆராய்ச்சிக்கூடத்திலும் சோதனை செய்யப்படுவதில்லை.

அடுத்த முறை இட்லி மாவு வாங்குவதற்கு முன்பாக, இந்த பின்விளைவுகளை எல்லாம் சற்று ஆழமாக அலசிப் பார்ப்பது அவசியம் மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com