கோடை வெப்பம் என்னென்ன செய்யும் தெரியுமா? ஜாக்கிரதை மக்களே!

The Summer Hot Sun
The Summer Hot Sun

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் கொளுத்தும் வெயில் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. என்னதான் சூரியன் இயற்கையின் சக்தி வாய்ந்த ஆற்றல் மூலமாக இருந்தாலும், இது நம் வாழ்வில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே சூரிய வெப்பம் பற்றிய உண்மைகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலமாக, கோடை வெப்பத்திலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். இப்பதிவில் கோடைகாலத்தில் சூரிய வெப்பம் நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  1. வைட்டமின் டி உற்பத்தி:  பொதுவாகவே சூரிய ஒளியால் நமக்கு விட்டமின் டி கிடைக்கறது என்பது அனைவருக்கும் தெரியும். இதுவே கோடை காலத்தில் அதிக சூரிய ஒளியால் நம் உடலில் அதிக விட்டமின் டி உற்பத்தி ஆகிறது. இது நம் எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பெரிதளவில் உதவுகிறது. எனவே கோடைகாலத்தில் முற்றிலுமாக வெயிலைத் தவிர்க்காமல், காலை வெயில் உங்கள் உடலில் படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

  2. அதிக ஆற்றல்: கோடை வெயில் பிரகாசமாக இருப்பதால் அது ஒரு புத்துணர்ச்சியை கொடுத்து நம் மனநிலையை மேம்படுத்துகிறது. சூரிய ஒளியில் வெளிப்படுவதால் உடலில் செரட்டோனின் ஹார்மோன் வெளியேறி, மகிழ்ச்சி மற்றும் நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. இது நம் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுத்து கவனமாக இருக்க உதவுகிறது. 

  3. நீரிழப்பு மற்றும் வெப்பம் தொடர்பான நோய்கள்: கோடை வெயிலின் கடுமையான வெப்பம் நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் பல்வேறு விதமான வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். வெயிலில் அதிக நேரம் இருந்தால் வியர்வை வெளியேறி திரவ இழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழி வகுக்கலாம். எனவே கோடைகாலத்தில் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். உங்களை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவும். 

  4. சரும பாதிப்பு: கோடை காலத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சரும சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சருமத்தின் நிறம் மாறுதல் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும்போது அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். மேலும் அதிக வெயில் உங்கள் மீது படாதவாறு தொப்பிகள், சன் கிளாஸ் மற்றும் குடை பயன்படுத்துவது நல்லது. 

  5. சுற்றுச்சூழல் பாதிப்புகள்: கோடை வெயிலின் கடுமையான வெப்பம் சுற்றுச்சூழலை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. இச்சமயத்தில் நீர் வேகமாக ஆவியாவதால், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை போன்ற மோசமான நிலை ஏற்படலாம். வரட்சி காரணமாக தாவரங்கள் காய்ந்து போதல், காட்டுத் தீ போன்ற அபாயங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக விவசாயத்துறையில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு, உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வித்தை உங்களிடம்தான் இருக்கிறது..!
The Summer Hot Sun

இப்படி பல விதங்களில் கோடைகால சூரிய வெப்பம் நமக்கு சில நன்மைகளையும், பல தீமைகளையும் வழங்குகிறது. எனவே முடிந்தவரை வெப்பத்தைத் தவிர்த்து உங்களை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது மூலமாக, கோடைகாலத்தில் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com