அதிக நீர் அருந்துவதற்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு உண்டா?

body weight
body weight
Published on

'என் உடலில் நீர் கோர்த்து விடுவதாலேயே நான் குண்டாகத் தோற்றமளிக்கிறேன்’ என்று சிலர் கூறுவர். சில பெண்களுக்கு ஹார்மோன் கோளாறு காரணமாக சிறுநீரகங்களினால் அதிக நீரை வெளியேற்ற முடியாமல், உடலிலேயே தேங்கி விடலாம். இதன் காரணமாக உடல் சற்றே உப்பி, எடை கூட சிறிது அதிகமாகக் இருக்கலாம். ஆனால், இந்த நிலைமை தற்காலிகமானது. உடலில் நீர் சேர்ந்து விடுவதால் உடல் பருமன் ஏற்படுவதில்லை. எனவே, அருந்தும் நீரின் அளவைக் குறைத்தால், உடல் எடை குறையும் என்பது தவறான எண்ணம்.

உடலுக்கு நீர் தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதை நிரூபிக்க ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். விளையாட்டு வீரர்கள் அடங்கிய மூன்று குழுக்களை, மணிக்கு மூன்றரை மைல் வேகத்தில் சுழலும் டிரெட்மில் எனப்படும் கருவியை இயக்கும்படி செய்தனர். குழுவுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஓய்வு அளித்தனர். முதல் குழுவினர் நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. இந்தக் குழுவால் மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு கருவியை இயக்க முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
வாரம் ஒரு முறை பச்சைப்பயிறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
body weight

இரண்டாவது குழுவினருக்கு அவர்களுக்கு எவ்வளவு நீர் தேவைப்பட்டதோ, அவ்வளவு நீர் அருந்தே அனுமதிக்கப்பட்டது. மூன்றாம் குழுவினருக்கு அவர்கள் உடல் எவ்வளவு நீரை இழந்ததோ, அவ்வளவு நீரைக் அருந்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டது. இந்தக் குழுவினர் ஏழு மணி நேரத்திற்குப் பிறகும், களைப்படையாமல் அந்தக் கருவியை இயக்கிக்கொண்டிருந்தனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தாகம் எடுப்பது என்பது உடலுக்கு வேண்டிய நீரின் அளவைக் குறிக்கும் அடையாளக் குறியீடு அல்ல. எனவே, தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தாமல், அடிக்கடி நீர் அருந்திக்கொண்டே இருப்பது சிறந்தது என்பது தெளிவாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com