காய்கறிகளில் உள்ளது மகத்தான மருத்துவம்!

vegetables...
vegetables...
Published on

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட இருமல், கபக்கட்டு நீங்கும்.

பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாழைத்தண்டு சாறை தீப்பட்ட புண்ணில் விட்டு கழுவி வர புண் கொப்பளிக்காமல் விரைவில் ஆறும்.

வயிற்று வலி, வாய்ப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் வலி சரியாகும்.

இஞ்சியை சுத்தம் செய்து தேனில் ஊறவைத்து ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பச்சை நெல்லிக்காயை கடித்து சாப்பிட பற்களின் கறை மறையத் தொடங்கும்.

வெள்ளை பூண்டை அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து தலையில் தேய்த்து வர பேன் தொல்லை நீங்கும்.

இஞ்சியை எலுமிச்சை சாறில் ஊறவைத்து சாப்பிட வாய்க்கசப்பு நீங்கும்.

பூண்டு சாற்றில் சிறிது உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவ சுளுக்கு மறையும்.

கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள இளநரை வராது.

வெங்காயத்தை வி எண்ணையில் வதக்கி சாப்பிட்டால் வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.

பீட்ரூட் சாறு,வெள்ளரி சாறு சேர்த்து சாப்பிட உடல் சூடு தணிவதோடு பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும்.

முட்டைக்கோஸ் சாறு சாப்பிட்டு வர முகச்சுருக்கம் நீங்குவதோடு, குடல் புண்ணை ஆற்றும்.வெறும் வாணலியில் லவங்கத்தை வதக்கி வாயில் இட்டு சுவைக்க தொண்டைப் புண் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
நாம் தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்!
vegetables...

உருளைக்கிழங்கை ரெகுலராக உணவில் சேர்த்துக் கொள்ள சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

முகப்பரு ஏற்படாமல் இருக்க உருளைக்கிழங்கு உதவுகிறது. தக்காளி உடலுக்கு தேவையான வைட்டமின்களை தந்து சருமம் பளிச்சென்று இருக்க உதவுகிறது.

கொத்தவரங்காய், அவரைக்காய் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள மலச்சிக்கல் ஏற்படாததோடு,குடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

இவ்வாறு பல நன்மைகளை தரும் காய்கறிகளை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com