வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இந்த 3 இயற்கை சர்க்கரையை பயன்படுத்தலாமே!

தேங்காய் சர்க்கரை
தேங்காய் சர்க்கரைhttps://freeropeov.space

வீன உலகின் தொழிற்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க மறுபக்கம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையை நன்கு உணர்ந்து, ‘வரும்முன் காப்போம்’ என்ற கூற்றின் அடிப்படையில் பலரும் இப்போது சாதாரண வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான, இயற்கையான இனிப்பை தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சாதாரண வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்த மூன்று இயற்கை சர்க்கரை வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேங்காய் சர்க்கரை: இது தேங்காய் பனை சர்க்கரை (Coconut Palm Sugar) அல்லது தேங்காய் பூ மொட்டு சர்க்கரை (Coconut Blossom Sugar) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னை மரங்களின் பூ மொட்டுகளின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை வகையான இனிப்பாகும் இது. வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய சர்க்கரையோடு ஒப்பிடும்போது தேங்காய் சர்க்கரை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும், இது நம்முடைய உடலின் இரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகிறது. குறிப்பாக, தேங்காய் சர்க்கரையானது நீரிழிவு நோயாளிகள் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் அக்கறை கொண்டவர்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும். இந்த தேங்காய் சர்க்கரை சிறந்த ருசியான கேரமல் போன்ற சுவையைக் கொண்டுள்ளது. இது பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களுக்கு இனிப்பு சுவையைத் தருகிறது. வழக்கமான வெள்ளை சர்க்கரைக்கு இது ஒரு சுவையான, சத்தான மாற்று இனிப்பாக இருக்கும்.

பேரீச்சம் பழச் சர்க்கரை: உலர்ந்த மற்றும் அரைத்த பேரீச்சம் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கையான இனிப்புதான் பேரீச்சம் பழச் சர்க்கரை. இது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த மாற்றாகும். இதில் வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும், இது சாதாரண சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் போல் இல்லாமல், விரிவான செயலாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

பேரீச்சம் பழச் சர்க்கரை
பேரீச்சம் பழச் சர்க்கரைEveryday better to do everything you love

நம்முடைய அன்றாட சமையல் குறிப்புகளில் பேரீச்சம் பழச் சர்க்கரையைச் சேர்ப்பது, பேக்கிங்கில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு ஒரு அருமையான மாற்றாக இருக்கும். அதோடு சமையலில் பலவிதமான இனிப்பு வகைகளுக்கு இது தனித்துவத்தை சேர்கிறது.

ஸ்டீவியா சர்க்கரை: ஸ்டீவியா எனும் செடியில் இருந்து பெறப்படும் ஒரு இயற்கை இனிப்பே ஸ்டீவியா சர்க்கரையாகும். இதில் பூஜ்ஜிய அளவிலான கலோரி தன்மை மற்றும் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக சாதாரண வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக பிரபலமடைந்துள்ளது. இந்த வகையான சர்க்கரை ஸ்டீவியா செடியின் இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதோடு, இதில் இனிப்பு சக்தி நிறைந்து காணப்படுகின்றது.

ஸ்டீவியா சர்க்கரை
ஸ்டீவியா சர்க்கரைhttps://www.youtube.com

சாதாரண சர்க்கரையை விட, சுமார் 200 முதல் 300 மடங்கு இனிமையானது. இதனுடைய இந்தத் தன்மையின் காரணமாகத்தான் அன்றாட உணவுகள் மற்றும் பானங்களில் விரும்பிய அளவு இனிப்புத்தன்மையைப் பெற, குறிப்பிடத்தக்க அளவிலான ஸ்டீவியா சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
Relationship Advice: காதலில் பெண்கள் எதிர்பார்க்கும் 7 விஷயங்கள்! 
தேங்காய் சர்க்கரை

இனிப்பு சுவையை அனுபவிக்கும் அதேவேளையில் சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த மாற்று தீர்வாகவும் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com