நமது சுக, துக்கங்களுக்கு இவை நான்கும்தான் காரணம்!

These four are the cause of our happiness and sorrows
These four are the cause of our happiness and sorrows

மது உடல் ஒரு இரசாயனக் கலவை என்றால், அது மிகையல்ல. அந்த இரசாயனங்கள் ஒவ்வொன்றும் ஒரு வேலையைச் செய்கிறது. அதிலும் நமது மூளையிலுள்ள சில நியூரோ கெமிக்கல்கள் செய்யும் பணிகளின் ஆற்றல் மகத்தானது. இந்த இரசாயனங்கள் தனித்தோ அல்லது இணைந்தோ நமது உடலில் பல்வேறு ஆச்சரியப் பணிகளைச் செய்கின்றன என்கிறார்கள் ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள்.

கோபமோ, சந்தோஷமோ, பயமோ, துக்கமோ எல்லாமே மனிதரின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான். நமது மன நலத்தையும், உடல் நலத்தையும் மேம்படுத்தவது இந்த நான்கு ஹார்மோன்கள்தான். அவை: செரடோனின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள்தான் நமது சுக, துக்கங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

செரடோனின் எனப்படும் ஹார்மோன் சரியான அளவில் சீராக சுரந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தம் மறையும். இதனால்தான் இதனை சந்தோஷ ஹார்மோன் என்கிறார்கள். செரடோனின் ஒருவரின் மனநிலையை சந்தோஷமாக வைத்து, பாலுணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன். ஒருவரது உடலில் செரடோனின் அளவு குறைவாக இருந்தால், அவர் தலைவலி, எரிச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்கக்கூடும். மனிதனின் மனநிலையையும், நரம்பு மண்டலத்தில் உள்ள மற்ற செரிமானப்பொருள் வகைகளையும் கட்டுப்படுத்துவதும் இந்த செரடோனின் என்ற இரசாயனப் பொருள்தான். இதன் அளவு குறையும்போது மனதில் வெறுப்பும், மந்த புத்தியும் வந்து விடுகின்றன. செரடோனின் உடலில் சுரக்க பி வைட்டமின்கள் தேவை.

டோபமைன்தான் நமது மூளையின் பலத்திற்குக் காரணம் என்றும், நம்மை புத்திசாலியாக வைத்திருக்கவும் இதுதான் காரணம் என்றும் கூறுகிறார், ‘யேல் யுனிவர்சிட்டி’ நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் ஆனார் சவ்சா. மேலும், டோபமைன் எனும் ஹார்மோன்தான் நமது இயக்கம், கற்கும் ஆற்றல், நினைவு திறன் போன்றவற்றிற்கும் காரணம் என்கிறார்கள்.

நம்பிக்கை, பிணைப்பு, காதல், கவரும் தன்மை, பாலியல் சிந்தனைகள், தாய்மை உணர்வு இவை அனைத்திற்கும் காரணம் ஆக்ஸிடோசின் எனும் இரசாயனம்தான் காரணம். அதேவேளையில் நமது பயம், விரக்தியுணர்வு, கோபம் போன்றவற்றுக்கும் இந்த இரசாயனம்தான் காரணம்.

மன அழுத்தம், பயம், வலிகளை குறைக்கும் கெமிக்கல் எண்டோர்பின். உடல், மன அழுத்தத்திற்கு உட்பட்டு அசௌகரியத்தை உணரும்போது இந்த ஹார்மோன் 'இயற்கை வலி நிவாரணி'யாக செயல்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற செயல்களில் ஈடுபடும்போது 'எண்டோர்பின்' சுரக்கிறது. டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ எண்டோர்பின்களை வெளியிடுகிறது. அதனால்தான் அதை சாப்பிடுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!
These four are the cause of our happiness and sorrows

நமது அன்றாட வாழ்வில் நடைபெறம் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணமாக இருக்கும் இந்த நான்கு ஹார்மோன்கள் நன்கு சுரக்க, நமது வாழ்க்கை நிலையாக இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். தினமும் முப்பது நிமிடங்களாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும். இயற்கை சூழலில் வாழ வேண்டும்.

மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோனை சுரக்கவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உணவுகளில் மாற்றங்களைச் செய்வது அவசியம். வைட்டமின் பி 6 இது செரடோனின் என்ற ஹார்மோனை உருவாக்குகிறது. இது அவகோடா, புளூபெர்ரி பழத்தில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள சால்மன் மீனில் அதிகம் உள்ளது. கீரை, கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. தக்காளி, உலர் பழங்கள் மற்றும் விதைகள், வாழைப்பழம், தேங்காய் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், குடும்பத்தில் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான நட்பு வட்டம் இருக்க வேண்டும். செல்லப்பிராணிகளிடம் பரிவு காட்டுதல், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஆக்கபூர்வமான குறிக்கோள் வேண்டும். அன்றாட வாழ்வில் சிரித்து மகிழ வேண்டும். இசை மற்றும் கலைகளில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். வாழ்வில் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com