நீங்கள் அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? ஜாக்கிரதை!

Habit of eating raw rice beware!
Habit of eating raw rice beware!

ங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளதா? இருந்தால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அதனால் பல பிரச்னைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் போர் அடிக்கும்போது அரிசியை சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆண்களை விட பெண்களுக்கு இந்தப் பழக்கம் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. சில பெண்கள் மாவு அரைக்கும்போதும், சமைக்கும்போதும் கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர், டைம்பாஸுக்காக அரிசியை சாப்பிடுகிறார்கள்.

முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் போகப்போக இதிலிருந்து விடுபட முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. வேக வைக்காத அரிசியில் செல்லுலோஸ் என்ற பொருள் இருப்பதால் அது ஜீரணத்தை கடினமாக்கும். மேலும், இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. இப்போதெல்லாம் பயிர்களுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துகிறார்கள். எனவே, அரிசியை வேகவைக்கும்போது, அதிலுள்ள பூச்சிக்கொல்லி வேதிப்பொருட்கள் முற்றிலுமாக அழிகிறது.

ஆனால், இதுவே வெறும் அரிசியை நாம் உட்கொண்டால், அது நம் உடல் நலத்திற்கும் பற்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதனால் செரிமானப் பிரச்னை அதிகம் ஏற்படும். எனவே, இதனால் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகி உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும். வேக வைக்காத அரிசியை அதிகமாக சாப்பிடும்போது சில சமயம் பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு தொந்தரவு கொடுக்கும். அரிசி முழுவதும் மாவுப் பொருள்தான் என்பதால் பல் சொத்தை ஏற்பட்டு அதில் தங்கும் கிருமிகளுக்கு நல்ல உணவாக இது மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால மனச்சோர்வை சமாளிக்க பத்து எளிய வழிகள்!
Habit of eating raw rice beware!

சிலர், ‘நாங்கள் பல நாட்களாக இப்படி சாப்பிடுகிறோம். எங்களுக்கு எந்த பாதிப்புகளும் இல்லை’ என நினைத்தால், அதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உங்களுக்குத் தெரியும். தொடர்ந்து வெறும் அரிசி சாப்பிடும்போது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு குடல் புற்றுநோய் கூட ஏற்படலாம்.

எனவே, வேக வைக்காத அரிசி சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனடியாக அதைக் கைவிடுங்கள். அரிசியை வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com