வயிற்றை சுத்தம் செய்ய இந்த எளிய உணவுகளே போதும்!

These simple foods are enough to cleanse the stomach
These simple foods are enough to cleanse the stomachhttps://tamil.boldsky.com
Published on

தினமும் மூன்று வேளை நாம் உணவு உண்கிறோம். அது தவிர, காபி, டீ, நொறுக்கு தீனிகள் என்று சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அவை வயிற்றில் ஜீரணமாகி சிறுகுடலில் கழிவுகளாகப் பிரித்தெடுக்கப்பட்டு வெளியே தள்ளப்படுகின்றது. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதும் மிகவும் முக்கியம். குடல் கழிவுகளை வெளியேற்ற இயற்கையான உணவுகளையே நாம் மருந்தாக பயன்படுதலாம். இவை, ‘டீடாக்ஸ் உணவுகள்’ என அழைக்கப்படுகின்றன. கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் வயிற்றுக்கு உண்டாகும் பாதிப்பை தடுக்க இவை பயன்படும். இது குடலில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு ஜீரணத்தையும் எளிதாக்குகிறது.

வயிறு நலம் கெட்டுப்போய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாய் துர்நாற்றம் வீசும், பசி இருக்காது, வயிறு உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

1. பாட்டி வைத்தியம்: இளம் சூட்டில் உள்ள நீரில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு படுக்கச் செல்லும் சமயம் குடித்துவிட்டுச் செல்ல, காலையில் வயிறு சுத்தம் அடைவதுடன், தேவையில்லாத கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த விளக்கெண்ணையைதான் பயன்படுத்தினார்கள். இதனை மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளையும், எண்ணெயில் பொரித்ததையும், எளிதில் செரிக்காத உணவுகளையும் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

2. மோர்: தயிரை விட மோர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. தயிரைக் கடைந்து மோராக்கி சிறிது உப்பு, சுக்கு பொடி, பெருங்காயம் சேர்த்து பருக வயிற்றுப் பிரச்னைகள் எதுவும் வராது.

3. கவுனி அரிசி: முழு தானிய உணவான கவுனி அரிசியில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன. இவை இரத்தத்தில் சேர்ந்துள்ள அசுத்தங்களை சுத்தம் செய்வதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கிறது.

4. பழங்கள்: பழங்களில் இயற்கையாகவே பல வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், இயற்கையான முறையில் வயிற்றையும் சுத்தம் செய்யும். எனவே, தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடுவது நல்லது.

5. எலுமிச்சை: வைட்டமின் சி சத்து நிறைந்த இது டீடாக்ஸ் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க, இரவு சாப்பிட்ட உணவில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதுடன் மலம் எளிதாகவும் வெளியேறவும் உதவுகிறது.

6. இஞ்சி: இது அஜீரணக் கோளாறு, வாயு பிரச்னைகளை சரி செய்யும். இஞ்சியை தேநீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். தோல் நீக்கி துருவிய இஞ்சியுடன் சிறிது வெல்லம் சேர்த்து மென்று சாப்பிடுவதும் நல்லது. இஞ்சி சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து பருகலாம்.

7. கடுக்காய்: இது சிறந்த நச்சகற்றி. ஒரு ஸ்பூன் அளவு கடுக்காய் தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடிக்க வயிற்று கழிவுகளை எளிதில் அகற்றி விடும். திரிபலா சூரணமும் சிறந்தது. இதனையும் வெந்நீரில் கலந்து இரவு படுக்கச் செல்லும் முன் பருக சிறந்த பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் கர்ப்பம் தரிக்காமைக்கு இதுவும் ஒரு காரணமா?
These simple foods are enough to cleanse the stomach

8. வெள்ளைப் பூண்டு: இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை நாம் அன்றாட உணவில் துவையலாகவோ, ரசத்திலோ, பாலில் வேக வைத்தோ சாப்பிட நல்லது. இவை தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளான காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முளைகட்டிய பயிர் வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

9. தண்ணீர்: இது மிகவும் எளிமையான, அதேசமயம் முக்கியமான ஒன்றாகும். உடலுக்குத் தேவையான அளவு நீர் பருகுவது உடலின் கழிவுகளை வெளியேற்ற உதவும். தண்ணீரை விட சிறந்த நச்சு நீக்கி வேறு எதுவும் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com