
தேற்றாங்கொட்டை என்பது மர வகையைச் சார்ந்தது. இம் மரத்தின் பழம், விதைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கையான சுத்திகரிப்பு முறையாக தண்ணீரை சுத்தப்படுத்தும். தேற்றாங்கொட்டையை பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் தண்ணீர் சுத்தமாகி தெளிவாக இருக்கும்.
கிணறுகளில் கலங்கிய கிணற்றில் தேற்றாங்கொட்டைகள் மற்றும் கருங்காலி கட்டைகளை போடுவது வழக்கம்.
கோடையில் தண்ணீரில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க மிளகு- 25 கிராம், சீரகம் -25 கிராம்,தேற்றாங்கொட்டை-1,வெட்டி வேர் சிறிது, வெந்தயம் ஆகியவற்றை துணியில் வைத்துக் கட்டி தண்ணீரில் போட்டு விட தண்ணீர் தூய்மை ஆகி விடும்.
தேற்றாங்கொட்டைக்கு இதைவிடவும் சில பண்புகள் உள்ளன. தேற்றாங்கொட்டையை பாலில் வேகவைத்து பின் கழுவி உலர்த்தி உபயோகிக்க நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.சிறுநீரக நோய்களைப் போக்கும்.
தேற்றான் கொட்டை விதை வெள்ளை நோய்,வெட்டை நோய், உடல் சூட்டை தணிக்கும். இளைத்த உடம்பைத் தேற்றும். உயிரணுக்களை அதிகரிக்கும். இதனால் தான் தேற்றாங்கொட்டைக்கு தேற்று மைந்தரை என்று பெயர் வைத்தனர்.
தேற்றான் விதைகளைப் பொடித்து பாலில் கலந்து கொடுக்க நீர்ச்சுருக்கு, வெட்டை நோய்கள் குணமாகும்.
விதைகளைப் பொடித்து தேனில் கலந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.
விதைகளில் Brucine என்ற அல்கலாய்டு உள்ளது. இவை ஈரல் நோய்களை போக்க வல்லது. விதைகளுடன் இந்துப்பை சேர்த்து அரைத்து கண் மீது பற்று போட கண் சிவப்பு மாறும். விதைகளுடன் கற்பூரம் சேர்த்து தேன் சேர்த்து அரைத்து பற்று போட கண்ணில் நீர் வடிதல், கண் பீளை சேர்தல் சரியாகும்.
இது இளைத்த உடலை தேற்றி உடலுக்கு ஊட்டம் தரவல்லது.
தேற்றான் விதையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்.