தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பை வேகமா குறைக்கணுமா? இந்த எளிய உடற்பயிற்சிகள் போதுமே!

தொடைப் பகுதி கொழுப்பு குறைப்பு: எளிய உடற்பயிற்சிகள்!
Thigh Fat Loss
Thigh Fat Loss

உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதென்பது பலருக்கு சவாலானதாக இருக்கிறது. குறிப்பாக தொடைப் பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். குறிப்பிட்ட இடத்தை மட்டும் டார்கெட் செய்து கொழுப்பை குறைப்பது சாத்தியமில்லை என்றாலும், சில எளிய உடற்பயிற்சிகள் மூலமாக உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைத்து, கச்சிதமான தொடைப் பகுதியைப் பெறலாம். 

இதையும் படியுங்கள்:
Chocolate Fudge Cake: முட்டை இல்லாத சாக்லேட் கேக்.. வேற லெவல் டேஸ்ட்! 
Thigh Fat Loss
  1. Squats: ஸ்குவாட்ஸ் ஒரு பல்துறை பயிற்சியாகும். இது முதன்மையாக தொடை மற்றும் பின்பகுதிகளைக் குறி வைக்கிறது. இதைச் செய்வதற்கு உங்கள் கால்களை தோள்பட்டை அகலத்திற்கு வைத்து, சேரில் அமர்வது போல உட்கார்ந்து எந்திரிக்க வேண்டும். தினசரி இந்தப் பயிற்சியை செய்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு வேகமாக குறையும். 

  2. Lunges: இந்த உடற்பயிற்சி உங்கள் கீழ் உடலில் உள்ள பல தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. இதைச் செய்வதற்கு ஒரு காலை முன்னோக்கி எடுத்து வைத்து, பின் முழங்கால் தரையில் படும்படி வளைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு காலாக மாற்றி செய்ய வேண்டும். 

  3. Leg Press: ஒருவேளை நீங்கள் ஜிம்முக்கு செல்லும் நபராக இருந்தால், அங்கு லெக் பிரஸ் மெஷின் கண்டிப்பாக இருக்கும். அதைப் பயன்படுத்தி நீங்கள் தொடர்ச்சியாக லெக் பிரஸ் செய்து வந்தால், உங்கள் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்பு விரைவாகக் குறையும். 

  4. Burpees: பர்பி உடற்பயிற்சி ஒட்டுமொத்த உடலுக்கும் ஏற்ற ஒரு உடற்பயிற்சியாகும். இது உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாகக் குறைக்க உதவுகிறது. இந்த உடற்பயிற்சி செய்வது சற்று கடினமாக இருந்தாலும், இதிலிருந்து கிடைக்கும் பலன்கள் ஏராளம். 

  5. Running: தினமும் காலையில் குறைந்தது 30 நிமிடமாவது ஓட்டப்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க இதுவே மிகவும் எளிதான உடற்பயிற்சி. அதேநேரம் வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதால் உங்களது மனதும் லேசாகும் என்பதால், இதை தினசரி கடைப்பிடியுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு தூரம் செல்கிறீர்கள் என்பதை டிராக் செய்து, உங்களுக்கான உந்துதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

  6. Cycling: சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு சுவாரசியமான கார்டியோ பயிற்ச்சியாகும். இது கலோரிகளை எரிக்கவும் தொடைகள் உட்பட ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. உங்களிடம் சைக்கிள் இருந்தால் நீங்கள் வெளியே சென்று சைக்கிள் ஓட்டலாம். அல்லது ஜிம்மில் நிலையான இடத்தில் இருக்கும் சைக்கிளை பயன்படுத்தி, குறைந்தபட்சம் 30 நிமிடம் தீவிர சைக்கிள் ஓட்டத்தை வாரத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com