குழந்தைப் பேறு தாமதமாகும் பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

childbirth
childbirthhttps://www.bbc.com

குழந்தைப் பேறு என்பது பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அதில் ஆண்களுக்கும் பெரும் பங்குண்டு. அதேபோல், குழந்தைப் பேறு தாமதமாவதற்கும் ஆண், பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு. இதில் பிள்ளைப் பேறு தாமதமாவதற்கு பெண்கள் தரப்பில் சில கருப்பை கோளாறுகளால் குழந்தை பாக்கியம் பெற நீண்ட நாட்களாகி விடுகின்றன. அதற்கு எளிய வைத்தியங்களை கையாண்டால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். அதற்கான சில வைத்திய குறிப்புகள்.

மகிழம்பட்டையை பொடித்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும்.

இலந்தை இலை ஒரு பிடி, மிளகு ஆறு, பூண்டு பல் நாலு இவற்றை மென்மையாகும் படி அரைத்து மாதவிலக்கான முதல் இரு நாட்கள் கொடுத்து வர கருப்பை குறைபாடுகள் நீங்கி மகப்பேறு வாய்க்கும்.

இளம் மூங்கில் குருத்தை சிதைத்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை, மதியம் குடித்து வர பேறு கால கருப்பை அழுக்குகள் வெளியேறும். சூதகக் கட்டு தீரும்.

மாவிலங்கம் பட்டையை இடித்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.

அசோகப்பட்டை, மாதுளை வேர் பட்டை, மாதுளம் பழவோடு இவற்றை சமனளவு பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர கருச்சிதைவு, வயிற்று வலி, கருச்சூலை, பெண் மலடு ஆகியவை தீரும்.

காரைப் பழத்தை காலை, மாலை சாப்பிட்டு வர, கருங்காலி பிசினை நீரில் கரைத்து காலை, மாலை சாப்பிட்டு வர தாது பலப்படும். கோரைக்கிழங்கை உலர்த்தி பொடித்து காலை, மாலை தேனில் சாப்பிட்டு வர தாது பெருக்கம் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்! 
childbirth

பழம் புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி இவற்றை சம அளவு அரைத்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை கொடுக்க கருப்பை இறக்கம் குணமாகும்.

மந்தார இலையை உலர்த்தி பொடித்து தேனுடன் சாப்பிட வாந்தி, குமட்டல், மசக்கை நீங்கி பசி உண்டாகும்.

ஓரிதழ் தாமரை இலை, வேர், பூ என்று சமூலம் அனைத்தையும் அரைத்து கணவன் மனைவி இருவரும் குடித்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.

அரச விதையை உலர்த்தி பொடித்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உயிர் அணுக்கள் பெருகி ஆண் மலட்டை நீக்கும்.

ஆலம்பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சங்காய் அளவு காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உயிரணுக்கள் உற்பத்தியாகும்.

பருத்தி இலைச் சாற்றை தேனில் கலந்து மாதவிலக்கு முடிந்ததும் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை பலம் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com