அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி, அதாவது சித்திரை 21ஆம் தேதி துவங்கி வைகாசி மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் அந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் வரும் வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் கத்திரி வெயில் என்று கூறுகிறோம். சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயிலில் மே 28 வரை நீடிக்கும். அப்பப்பா! அந்த வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டே இருக்கிறீர்களா?

நிறைய தண்ணீர் குடியுங்கள் வழக்கமாக குடிக்கும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக ஒரு லிட்டர் குடித்தால் கூட தப்பு இல்லை.

காரமான எந்த உணவையும் சாப்பிடாதீர்கள். அதிலும் எண்ணெயில் வறுத்தது பொரித்தது, ஊறுகாய் இதுபோன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

மதியம் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நிறைய நீர் மோர் குடியுங்கள். அதேபோல் இளநீர், பனை நுங்கு, தர்பூசணி பழம், கிர்ணி பழம், முலாம்பழம் போல் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தாராளமாக ஜூஸ் எடுத்து குடியுங்கள் அல்லது அப்படியே கூட சாப்பிட்டாலும் தப்பில்லை.

எலுமிச்சை பழத்தை பிழிந்து ஜூஸாக தயார் செய்து அதில் உப்பு அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். அது பனைவெல்லமாக இருந்தாலும் தப்பு இல்லை. ஆனால், எலுமிச்சம் பழ ஜூஸில் கட்டாயம் சிறிது உப்பு சேர்த்தால் தான் நமக்கு அதன் துவர்ப்பு தெரியாமல் இருக்கும். அதை இந்த கத்திரி வெயில் நேரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை அருந்தலாம்.

வெளியில் செல்லும்போது கண்ணுக்குத் சன் கிளாஸ் அணிந்து செல்லுங்கள். சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சன் ஸ்கிரீன் லோஷனை தடவிக் கொள்ளுங்கள். காலை மாலை இரண்டு வேளையும் குளியுங்கள்.

கத்திரி வெயிலின் சூட்டினால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டால், தேங்காய் எண்ணெயை வைத்து பாதத்தை நன்றாக துடைத்து, பிறகு அதில் மஞ்சளை தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவி விட்டால் வெடிப்பு சரியாகிவிடும்.

குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி, பருத்தி ஆடைகளை அணியுங்கள். நாகரிகம் என்ற பெயரில் அதிக அளவு கல் வைத்த ஆடைகளை அணியாதீர்கள். கோடை வெயிலினால் ஏற்படும் வியர்வை நம் உடலில் ஏற்கனவே நமைச்சலை ஏற்படுத்தும். இந்த ஆடையினால் தோலில் உடனே திட்டு திட்டாக சிவப்பு சிவப்பாக தோல்கள் சிவந்து எரிச்சல் ஆரம்பித்து விடும்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான சருமத்தைப் பெற அன்னாசி பழத்தை இப்படியெல்லாம் பயன்படுத்துங்கள்! 
அக்னி நட்சத்திரம்

சாப்பாட்டில், மோர் சாதம், தயிர் சாதம், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றை தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஆதனால் கத்திரி வெயிலில் நமது வயிறு பாதுகாப்பாக இருக்கும்.

கத்திரி வெயிலில் உடலுக்கு அதிகமான மேக்கப் செய்யாமல் சாதாரணமாக சந்தன பவுடரை பூசிக்கொண்டாலே போதும்.

கத்திரி வெயிலில் கவனமாக இருந்து, அந்த நாட்களை கோடையின் உக்கிரகத்திலிருந்து, சூரியனின் பாதிப்பிலிருந்து சமாளிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com