அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

Jelly Sweets
Jelly Sweets
Published on

ஜெல்லி மிட்டாய்கள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கடைகளில் கிடைக்கும் ஜெல்லி வடிவ உணவுகளை விரும்பாத குழந்தைகளே கிடையாது. அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்கள் 90s கிட்ஸாக இருந்தாலும் சரி.. 2k கிட்ஸாக இருந்தாலும் சரி.. இந்த ஜெல்லி மிட்டாயை தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் ரசித்து ருசித்து சாப்பிட்டு இருப்பார்கள். தற்போது, இந்த ஜெல்லி வடிவிலான இனிப்புகளை வீடுகளிலும் செய்து அதை ருசித்து வருகின்றோம்.

பொதுவாக, இந்த ஜெல்லி உணவுப் பொருள்களின் தயாரிப்பில்  சர்க்கரை, ஜெலட்டின், சுவையூட்டிகள், இயற்கை மற்றும் செயற்கை இனிப்புகள், அத்துடன் இயற்கை உணவு வண்ணங்கள் அல்லது செயற்கை உணவு சாயங்கள் ஆகியவை மூலப்பொருள்களாக சேர்க்கப்படுகின்றன.

இவற்றில்  ஜெலட்டின் என்பது  ஜெல்லி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதுவே, ஜெல்லி வடிவிலான இனிப்புகளுக்கு கொழகொழப்பான, அதே சமயத்தில் கெட்டியான தளதளவென்ற வடிவத்தைக் கொடுக்கிறது. இந்த ஜெலட்டின் பவுடராகவோ, சிறு குச்சி அல்லது துகள்கள் வடிவிலோ பல வண்ணங்களில் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறு மாதுளை போல் இருக்கும் மெட்லர் பழம்!
Jelly Sweets

சிலவகை ஜெலட்டின் மற்றும் ஜெல்லிகள் தாவரம் அல்லது கடல் பாசியில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், கடைகளில் விற்கப்படும் சிலவகை ஜெலட்டின்கள், விலங்குகளின் எலும்பு, எலும்பு திசு, ஜவ்வு மற்றும் இணைப்புத் திசுக்கள் போன்றவற்றைப் பல செயல்முறைகளுக்கு உட்படுத்தி, பல வேதிப்பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு விலங்குகளின் திசுக்களில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ஜெலட்டின் அல்லது ஜெல்லிகளின் பாக்கெட்டில் இருக்கும் மூலப்பொருள் பட்டியலில் 'Animal Origin's என்று குறிப்பிடப்பட்டிருக்குமாம். ஆனால் இது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

மேலும், கடைகளில் விற்கப்படும் தாவர மற்றும் விலங்கிலிருந்து தயாரிக்கப்படும் இந்த இரண்டு வகை ஜெல்லிகளிலும் அதிக சர்க்கரை, கண்ணை கவரும் விதமாக இருக்க அதிக செயற்கை வண்ணங்கள் மற்றும் அவை கெட்டுப் போகாமல் பாதுகாக்க  ப்ரீசர்வேடிவ்ஸ் (preservatives) போன்ற சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அடிக்கடி வாங்கி உண்ணும்போது உடல்பருமன், பற்களில் சொத்தை மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக கருதப்படுகிறது.

எனவே, ஜெல்லியை விரும்பும்  சைவப்  பிரியர்கள்  அவற்றின் பாக்கெட்டுகளில் உள்ள மூலப்பொருள்களைப்  பார்த்து வாங்கி உண்ணவும். முடிந்த அளவு ஜெல்லிகளை கடைகளில் வாங்கி உண்பதைத் தவிர்த்து, வீடுகளிலேயே பழங்களைப் பயன்படுத்தி ஜெல்லி செய்து சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com