குளிர்காலத்தில் இரத்த அணுக்களை அதிகரிக்க இந்த உணவு மிகவும் அவசியம்!

Food that increase blood cells in winter
Food that increase blood cells in winter
Published on

ச்சை பட்டாணி பருப்பு வகையைச் சேர்ந்த ஒரு குளிர்கால உணவு. அமெரிக்க விவசாய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் உலகின் பலதரப்பட்ட காய்கறிகளில் நூற்றுக்கு நூறு வாங்கிய மூன்று காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கே, பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளன.

பீன்ஸ்சுடன் ஒப்பிடும்போது பட்டாணி குறைந்த கலோரி உள்ளது. 100 கிராம் பச்சை பட்டாணியில் கலோரி 83 (உலர்ந்த பட்டாணியில் 305) கலோரி உள்ளது. மேலும், ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த நியாசின் 2.4 மில்லி கிராம், ரிப்போபுளோவின் 260 மைக்ரோ கிராமும், தயாமின் 120 மைக்ரோ கிராமும் உள்ளன. இத்துடன் வைட்டமின் சி 2.7 மில்லி கிராமும், வைட்டமின் ஏ 8500 சர்வதேச யூனிட் அலகும் உள்ளன.

கண் கோளாறுகள், எலும்பு, பல் சம்பந்தமான நோய்களுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இரத்த விருத்திக்கும் பச்சை பட்டாணி நல்லது. இதில் நமது உடலுக்குத் தேவையான போலிக் அமிலம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் டி.என்.ஏ. கட்டமைப்பில் பங்கேற்கிறது.

பச்சை பட்டாணி ஜீரண சக்திக்கு உதவுகிறது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து. இதில் கொலஸ்ட்ரால் இல்லை. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது.

இதய நோய்க்குக் காரணமான கெட்ட கொழுப்பினை இதில் உள்ள வைட்டமின் பி3 (நியாசின்) தடை செய்கிறது. இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடை செய்கிறது.

பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பச்சை பட்டாணி சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம். பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. அதனால்தான் இதை குளிர் காலத்தில் தவறாமல் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.

பச்சை பட்டாணி குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்., பிரிரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது. பச்சை பட்டாணி புரதத்தின் சிறந்த மூலமாகும், கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த இதிலுள்ள நியாசின் உதவுகிறது. குளிர் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து. இதில் கண்களின் ஆரோக்கியம் காக்கும் கரோடினாய்ட் நிறமியும், லுடினும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு குளிர்கால மற்றும் கோடைக்கால உடைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
Food that increase blood cells in winter

நரம்புக் கோளாறுகள், சளி, காய்ச்சல், குளிர் காய்ச்சல் உள்ளவர்கள் அதிகளவில் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம் 100 கிராம் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க எம்.ஐ.டி கல்வி நிறுவன ஆய்வாளர்கள். எனவே, பச்சை நிற பட்டாணியை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று பச்சைப் பட்டாணி. இதில் வைட்டமின் ‘சி’ 67 சதவீதம் இருக்கிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்கு வழங்கும். மற்ற காய்கறிகளை விட அதிக புரதச்சத்து உள்ளது. அதனுடன் கரையும் நார்ச்சத்தும், வைட்டமின் ‘சி’, ஃபோலேட், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘கே’ உள்ளது. இதிலுள்ள கணிசமான இரும்புச்சத்தும், ஃபோலேட் சத்துக்கள் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

சால்ட், குருமா, பிரைடு ரைஸ், கூட்டு, நூடுல்ஸ் என பல்வேறு சுவையான உணவுகளை பச்சைப் பட்டாணி மூலம் சமைக்கலாம் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், பச்சைப் பட்டாணியை அளவாக சாப்பிடுவது நல்லது. தினசரி எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com