கீர்த்தி சுரேஷ் தினமும் எடுத்துக்கொள்ளும் Healthy Juice இதுதான்!

Keerthy suresh's healthy drink
Keerthy suresh
Published on

கீர்த்தி சுரேஷ் டயட் ப்ளானில் முக்கியமான ஒன்றைப் பற்றிதான் இப்போது பார்க்கவுள்ளோம். இவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஜூஸை எடுத்துக்கொள்வாராம். அதுபற்றி அவர் கூறியதைப் பார்ப்போம்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ரஜினிமுருகன் படத்தின்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஃபேவரட்டாக மாறினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் ரகுதாத்தா. இந்தப் படத்தில் வித்தியாசமாக நடித்து மக்களின் ஆதரவைப் பெற்றார். இவர் தனது உடல் மற்றும் அழகை பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அப்போதிலிருந்து இப்போது வரை கீர்த்தி சுரேஷ் தனது உடலை ஒரே மாதிரியாக பராமரித்து வருகிறார்.

இவரின் இந்த சீக்ரெட் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அப்போது அவர் தினமும் வெறும் வயிற்றில் ஒரு பானம் குடித்து வருவதாக கூறினார்.

அந்த பானம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

1.  பாலக் கீரை

2.  செலரி கீரை

3.  வெள்ளரி

4.  புதினா

5.  பூண்டு ஒன்று அல்லது இரண்டு பல்

6.  இஞ்சி

7.  தண்ணீர்

8.  சிறிது எலுமிச்சை சாறு.

 செய்முறை:

பாலக் கீரையை சிறிது வெட்டி எடுத்துக்கொள்ளவும் மற்றும் செலரி கீரையை சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு புதினா இலை சேர்க்கவும். பூண்டு ஒன்று அல்லது இரண்டு பல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி சிறிதளவு எடுக்கவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் உற்றி நன்கு அரைக்கவும்.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு அழகு சேர்க்கும் 5 எண்ணெய்கள்!
Keerthy suresh's healthy drink

இதை வடிகட்டி சாறாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாறில் சிறிதளவு எலுமிச்சை சாற்றைப் பிழிந்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சத்தான பானம் ரெடி.

இந்த பானத்தின் நன்மைகள்:

இந்த பானத்தில் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன. முகப் பொலிவு முதல் உடல் நச்சுத்தன்மை நீக்கம் வரை பல்வேறு நன்மைகள் இதில் உள்ளன. வெறும் வயிற்றில் நீங்களும் குடித்து வரலாம். இருப்பினும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரிடம் கேட்டப்பின் குடிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com