இந்த ஒரு இலை இருந்தால் போதும்; கால் வலி, மூட்டு வலி பறந்து போகும்!

This one leaf is enough; Leg pain and joint pain will go away
This one leaf is enough; Leg pain and joint pain will go awayhttps://superbloov.life

ன்றைய காலகட்டத்தில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், 40 வயதைத் தாண்டியவர்கள் அனைவரும் மூட்டு வலியாலும் நீரிழிவு நோயாலும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். கால் வலி, பாத வலி என்று ஓயாத உழைப்பினால் இதுபோன்ற வலிகளை அனுபவித்து வருபவர்களுக்கு இந்த ஒரு இலை அற்புதமான நன்மையை செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

எருக்கன் செடி இலைக்கு பாத வலி, கால் வலி போன்றவற்றை நீக்குவதற்கான ஆற்றல் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாதத்தில் நீர் வடிதல் பிரச்னை இருக்கும். தீவிரமான இந்தப் பிரச்னைக்குக்கூட ஒரே ஒரு எருக்கன் செடியின் இலையே போதும். எருக்கஞ்செடி இலைகளை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய காலணிகளுக்கு இடையில் இந்தச் செடியின் இலையை வைத்து விடுங்கள். நீங்கள் நடக்கும்போது அந்த இலையின் மீது காலை வைத்து காலணி போட்டுக்கொண்டே நடக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இப்படி நடந்து பாருங்கள். மேற்சொன்ன வலிகள் எல்லாம் காணாமலேயே போய்விடும். இதை பலரும் அனுபவபூர்வமாக இன்றும் கிராமத்தில் செய்து பலன் பெற்று வருகின்றனர்.

எருக்கன் செடியின் இலை மட்டுமல்ல, பூ, பட்டை, வேர் என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எருக்கஞ்செடியின் இலைகளை நன்கு காய வைத்து அதனை பொடித்து புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் ஆறும்.

எருக்கன் செடியின் இலை சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கடுகு எண்ணெயில் வேகவைத்து பின்பு இதை சருமத்தில் ஏற்படும் படை, சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு தடவினால் விரைவில் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
அதிகாலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன தெரியுமா?
This one leaf is enough; Leg pain and joint pain will go away

பழுத்த இலையை குதிகால் வீக்கத்தின் மீது வைத்து சுட்ட செங்கலை அதன் மீது வைத்து ஒத்தடம் கொடுத்து வர, குதிகால் வீக்கம் சரியாகும்.

காலில் முள் தைத்தால் எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக் கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், குத்திய முள் வெளியே வந்து விடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் கடைபிடித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com