மழைக்காலத்தை சமாளிக்க இந்த ஒரு எண்ணெய் வீட்டில் இருந்தாலே போதுமே!

Benefits of Eucalyptus oil
Benefits of Eucalyptus oilImage Credits: 1mg
Published on

ழைக்காலத்தில் எண்ணற்ற நோய்கள் நம்மை சுலபமாகத் தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவற்றால் ஏற்படும் சளி, இருமல், ஜலதோஷம்,  மூச்சுப் பிரச்னை போன்றவற்றை சமாளிக்க இந்த ஒரு எண்ணெய் வீட்டில் இருந்தாலே போதுமானதாகும். யூகலிப்டஸ் மரம் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது. யூகலிப்டஸ் மரம் அதன் மருத்துவ குணத்திற்கு பெயர் போனது. இந்த மரம் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தன்மையைக் கொண்டது. யூகலிப்டஸ் எண்ணெய்யில் Healing properties உள்ளது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. இருமல்: யூகலிப்டஸ் எண்ணெய் பல வருடங்களாக இருமல் பிரச்னைக்கு பெரிதும் உதவுகிறது. இருமலை சமாளிக்க கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் மருந்துகளில் கூட சில சதவீதம் யூகலிப்டஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இது இருமலைப் போக்க உதவும் முக்கியமான பொருளாகும். சளி, ஜுரம் போன்ற சமயங்களில் இருமலைப் போக்க நெஞ்சு, கழுத்தில் யூகலிப்டஸ் எண்ணெய் தடவுவதால் அந்த பிரச்னை விரைவில் குணமடைய உதவுகிறது.

2. சளி பிரச்னை: இருமல் மட்டுமல்லாமல், நெஞ்சில் சேர்ந்திருக்கும் சளியை வெளிக்கொண்டு வருவதற்கு யூகலிப்டஸ் எண்ணெய் உதவுகிறது.

3. பூச்சிகளை விரட்டுகிறதுள்: கொசுக்கள் மற்றும் இதர கடிக்கக்கூடிய பூச்சிகள்தான் நோய் தொற்றிற்கு முக்கியமான காரணமாகும். இதனால், நம் உடல்நிலை அதிகமாக பாதிக்கக்கூடும். எனவே, அவற்றை விரட்டுவதற்கு யூகலிப்டஸ் எண்ணெய்யை சிறந்த Repellent ஆக பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கிருமி நாசினி: ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் அடிப்பட்ட காயங்களில் யூகலிப்டஸ் இலையை பயன்படுத்தி சிகிச்சை செய்கிறார்கள். யூகலிப்டஸ் எண்ணெய் வீக்கத்தைக் குணப்படுத்த உதவுகிறது. யூகலிப்டஸ் கலந்த ஆயின்மெண்ட் கடைகளில் கிடைக்கிறது. இது தீக்காயம், புண்கள் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

5. மூச்சுப் பிரச்னை: சுவாசப் பிரச்னையான ஆஸ்துமா, சைனஸ் ஆகியவற்றை குணப்படுத்த யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுதண்ணீரில் 2 அல்லது மூன்று சொட்டுக்கள் விட்டு ஆவி பிடிப்பதால் சளி கரைந்து வெளியே வருவது மட்டுமல்லாமல், மூச்சு விடவும் சுலபமாக இருக்கும்.

6. இரத்த சர்க்கரை: யூகலிப்டஸ் எண்ணெய் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது. இந்த எண்ணெய் கலந்த மருந்தை உட்கொள்ளும்பொழுது அது சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைப்பதாக சொல்லப்படுகிறது.

7.உதட்டு புண்: உதட்டில் ஏற்படும் கொப்பளங்களை சரிசெய்ய யூகலிப்பஸ் எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெய்யில் Anti inflammatory properties உள்ளதால் வீக்கத்தை குறைத்து, வலியை போக்கி விரைவில் புண்ணை குணப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
சொத்தைப் பல் வலியைப் போக்க எளிய 6 பாட்டி வைத்தியம்!
Benefits of Eucalyptus oil

8. சுவாச புத்துணர்ச்சி: புதினா மட்டுமே சுவாச துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை தரக்கூடிய தன்மையுடையது கிடையாது. யூகலிப்டஸ் எண்ணெய்யில் ஆன்ட்டி பாக்டீரியல் குணம் உள்ளதால், இதுவும் வாயில் துர்நாற்றம் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. சில Mouth wash மற்றும் Tooth pasteல் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளது. இது பல் சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகளையும் அழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9. மூட்டு வலி: யூகலிப்டஸ் எண்ணெய் வலி நிவாரணியாக பயன்படுகிறது. இது மூட்டு சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. முதுகு வலி, முட்டி வலி போன்ற வலிகளை சரிசெய்து வீக்கத்தை குறைக்கிறது. எனவே, மறக்காமல் மழைக்காலத்தில் இந்த எண்ணெய்யை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்வது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com